குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ராணுவ அதிகாரி பாராட்டியது தொடர்பாக ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மண்டலத் தளபதி மேஜர் ஜெனரல் ஐ.எஸ். சிங்கா, "வெற்றிகரமான ராணுவத் தளபதியாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் முதல்வர் மோடிக்கு உள்ளது. மாநில மற்றும் தேச வளர்ச்சியை குறிவைத்தே அவரது திட்டங்கள் அமைந்துள்ளன." என்று பேசினார். இந்நிலையில், அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ராணுவம் முழுமையாக அரசியல் சார்பற்றது. குஜராத் முதல்வர் குறித்து மேஜர் ஜெனரல் ஐ.எஸ். சிங்கா என்ன கூறினார் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்ந்து வருகிறோம். என்னால் தற்போதைக்கு ஒன்று மட்டும் உறுதியாக கூறமுடியும். ராணுவம் அரசியல் சார்பற்றது." என்று தலைமைத் தளபதி வி.கே. சிங் கூறினார்.
ராணுவ அதிகாரியின் கருத்து சரியா? என்று அவரிடம் கேட்டபோது, "ஐ.எஸ். சிங்கா எந்த அடிப்படையில் மோடியை பாராட்டினார் என்பது எனக்குத் தெரியாது" என்றார் தலைமைத் தளபதி.
dinamani
No comments:
Post a Comment