islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஓட்டுக்கு நோட்டு:காங்கிரஸ் அரசின் கேவல அரசியல்




விக்கிலீக்ஸ் இணையதளம் ‘ஹிந்து’ நாளிதழ் வழியாக வெளியிட்டுவரும் இந்தியா தொடர்பான அமெரிக்க தூதரக கேபிள் செய்திகள் இந்திய அரசியலை கலக்கிவருகிறது.




கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த செய்தியை விக்கிலீக்ஸ் ‘ஹிந்து’ நாளிதழ் மூலமாக வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அரசை கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான நிர்ணாயக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி எம்.பிக்களை விலைகொடுத்து வாங்கியது என வேறுபட்ட இருநபர்கள் புதுடெல்லி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்த செய்தியைத்தான் விக்கிலீக்ஸ் ‘ஹிந்து’ நாளிதழ் வழியாக வெளியிட்டுள்ளது.

ஜாட் தலைவர் அஜீத் சிங்கின் ‘ராஷ்ட்ரீய லோக்தள்’ கட்சியின் நான்கு எம்.பிக்களுக்கும், அரசுக்கு ஆதரவளிக்க 10 கோடி ரூபாய் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மாவின் அரசியல் உதவியாளர் என அறிமுகப்படுத்திய நசிகேதா கபூர் என்பவர் அமெரிக்க அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களுக்கு அளிக்கவிருந்த பணம் அடங்கிய இரண்டு பெட்டிகளை அமெரிக்க அதிகாரியிடம் அவர் காட்டியுள்ளார். பல்வேறு எம்.பிக்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் கட்சியின் வசம் 50 முதல் 60 கோடி ரூபாய் வரை பணம் உள்ளதாகவும் இவர் அமெரிக்க அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அமெரிக்க தூதரக அதிகாரி ஸ்டீவன் வைட் இச்செய்தியினை வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், தாங்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என சதீஷ் சர்மாவும், நசிகேத் கபூரும் மறுத்துள்ளனர்.

தனது கட்சியின் எம்.பிக்களை விலைக்கொடுத்து வாங்கிய செய்தியை அஜீத் சிங் மறுத்துள்ளார். தனது கட்சி எம்.பிக்கள் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதனை நிரூபிக்க அன்று கொறடாவுக்கு அளித்த சான்றை அஜீத் சிங் பத்திரிகையாளர்களிடம் காண்பித்தார். தமது கட்சி அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானது எனவும், ஜப்பானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எங்களுடைய நிலைப்பாட்டை உறுதிச் செய்வதாகவும் அஜீத் சிங் தெரிவித்தார்.

இந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அரசு சார்பாக கொடுத்த விளக்கத்தை ஏற்க எதிர்கட்சியினர் மறுத்துவிட்டனர்.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசு ராஜினாமாச் செய்யக் கோரியபொழுது, பண பட்டுவாடாக் குறித்த முழுமையான விசாரணை நடத்த சி.பி.ஐ உயர் புலனாய்வு ஏஜன்சிகளை நியமிக்க இடதுசாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சியினர் வலியுறுத்தினர்.

அமெரிக்க தூதரக அதிகாரி அனுப்பிய செய்தியை மட்டும் ஆதாரமாக்கி முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்து சதீஷ் சர்மா மற்றும் நசிகேதா கபூர் ஆகியோருக்கெதிராக விசாரணை நடத்த வேண்டுமென இடதுசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா டெல்லியிலும், அண்டை மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment