islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மொபைல்: ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்




ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்களைக் கொண்டு இக்-கைபேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.




கைபேசிகளில் உள்ள மின்கலன்களை மின்சாரம் மூலம் மின்னூட்டம் (சார்ஜ்) செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான கைபேசிகளில் தினசரி மின்னூட்ட வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சில கைபேசிகளில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்குச் சக்தி இருக்கும். தற்போது ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண கைபேசி மின்கலன்களை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை.

அவை உலோக நுண்குழாய்களுக்குப் பதிலாக மிகச் சிறிய அளவிலான "நானோடியூப்"கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் தலைமுடியை விட 10 ஆயிரம் மடங்கு நுண்ணிவை. இல்லினோயிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இந்த புதுவகை மின்கலன் கொண்ட செல்லிடப் பேசிகள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment