islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரம் - இந்துக்களுக்கு இலவச உதவிகள் இல்லையா?







முஸ்லீம்கள், கிருத்தவர்கள், சீக்கியர் உள்பட சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்கப்படாமல் சிறுபான்மையினருக்கு கல்வி உதவி வழங்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது பா.ஜ.க.




இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களை விடவும் முஸ்லீம்கள் கல்வியிலும் பொருளாதாரத் திலும் மிகவும் பின் தங்கி உள்ளார்கள் என்ற உண்மையை வெளியிட்ட நீதிபதி சச்சார் அறிக்கை யின் அடிப்படையிலேயே மத்திய அரசு ஒரு சிறு தொகையை (தமிழகத்துக்கு ரூ.35 கோடி) குறிப்பிட்ட எண்ணிக்கையில் 2008 ஆம் ஆண்டிலிருந்து கல்வி உதவியாக வழங்குகின்றது. 2010 ஆம் ஆண்டு தமிழகத்தில் முஸ்லீம்களில் தொழில் கல்வி படிப்பிற்கு 1383 பேர். பிற பட்ட படிப்புகள் - 3202 பேர். பள்ளி படிப்பிற்கு - 36600 பேர்களுக்கு மட்டுமே அரசு வழங்குகின்றது. விண்ணப்பிக்கும். அனைவருக்கும் இந்த தொகையை அரசு வழங்குவதில்லை.


இந்தக் கல்வி உதவித் தொகையை பெறுவோர் வேறு எந்த மத்திய, மாநில அரசின் உதவி தொகையை பெற முடியாது. இந்த கல்வி உதவி தொகை எல்லா சிறுபான்மையினருக்கும் கொடுக்கப்படுவது கிடை யாது. பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மை யினருக்கே வழங்கப்படுகின்றது. விண்ணப்பித்த எவ்வளவோ முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைக்க வில்லை. இதிலும் அரசு அதிகாரிகளின் முஸ்லீம் விரோத போக்கினாலும், ஊழலினாலும் அரசு தரும் பணமும் முழுமையாக முஸ்லீம்களுக்கு போய் சேர்வதில்லை.


அதே நேரத்தில் இந்துக்களுக்கும் மத்திய அரசு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டே வருகின்றன.


1. பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்துக்கள் உட்பட அனைவருக்கும் கல்வி உதவி தொகையாக மத்திய அரசு மாதம் ரூ.1000 வழங்குகின்றது. சிறுபான்மை கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சிறுபான்மையின மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உதவி கிடைக்காது. எனவே, இது இந்துக்களுக்கே உள்ளது. இந்த கல்வி உதவித் திட்டத்தின் முழு விவரமும் மத்திய அரசின் உயர் கல்வித் துறை இணைய தளத்தில் www.education.nic.in

உள்ளது.


2. இந்தியை விருப்ப மொழியாக தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.3500 முதல் ரூ.12000 வரை மத்திய அரசு வழங்குகின்றது. சிறுபான்மை கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சிறு பான்மையின மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உதவி கிடைக்காது. எனவே இது இந்துக்களுக்கே உள்ளது. இந்த கல்வி உதவித் திட்டத்தின் முழு விவரமும் www.education.nic.in இணையதளத்தில் உள்ளது.



3. இது தவிர எஸ்.சி./எஸ்.டி. சமுதாயத்தினருக்காக சிறப்பான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்தி வருகின்றது. இதை இந்துக்களை தவிர யாரும் வாங்க இயலாது. இந்தக் கல்வி உதவித் திட்டத்தின் முழு விவரமும் www.education.nic.in இணையதளத்தில் உள்ளது.



இது தவிர இந்துக்களுக்கு மாநில அரசு வழங்கும் உதவித் தொகை:



1. தலித் சமுதாயத்தினரின் கல்விக்காக மட்டும் இந்த வருட 2011 தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை இந்துக்களை தவிர வேறு யாரும் வாங்க இயலாது.



2. மேலும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வருடா வருடம் தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகின்றது.



எனவே, இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்காமல், சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகின்றது என்று கூறி, பா.ஜ.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையில்லை!



- ‘உணர்வு’

No comments:

Post a Comment