islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமுக்கு எதிரான பாவச் செயல்களைக் குறிவைக்கும் வெடிகுண்டுகள்




இஸ்லாமுக்கு எதிரான பாவங்களுக்காக எனக் குற்றம்சாட்டி 3 இந்தோனேசியர்களுக்கு அனுப்பப்பட்ட தபால் வெடிகுண்டுகளில் ஒன்று வெடித்து 4 பேர் காயமடைந்தனர்.



இந்த புதிய அச்சுறுத்தல் உலகின் மிகவும் பிரபலமான முஸ்லீம் நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

வெடித்த அந்த குண்டு அமெரிக்க நிதிஉதவியுடன் நடத்தப்படும் இஸ்லாமிய லிபரல் நெட்வொர்க்கின் நிறுவனரான யுலில் அப்சார் அப்தல்லா என்பவரின் முகவரிக்கு வந்தது.

ரேடியோ நிகழ்ச்சிகள், இணையதளம், விவாதக் குழுக்கள், பப்ளிகேஷன்கள் மூலமாக மத நம்பிக்கையின் திறந்த வடிவமான சகிப்புத் தன்மையை நீண்டகாலமாக அந்த இஸ்லாமிய நெட்வொர்க் அமைப்பு வலியுறுத்திவந்தது.

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பாவச் செயல்களுக்காக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற தலைப்புடன்கூடிய ஒரு தடிமனான புத்தகத்தின் துளை ஒன்றினுள் குறைந்த சக்திகொண்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டு செவ்வாயன்று விநியோகிக்கப்பட்டன.

அப்தல்லாவுக்கு விநியோகிக்கப்பட்ட வெடிகுண்டில் இருந்த குறிப்பு ஒன்றில் தாக்குதல் பட்டியலில் யார் முதலில் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. வெடிகுண்டு கடிதம் வந்தபோது அவர் அலுவலகத்தில் இல்லை.

அந்த குண்டை செயலிழக்கச் செய்ய போலீசார் முயன்றபோது திடீரென அது வெடித்தது. இதில் போலீஸ் காவலர் ஒருவருக்கு இடது கை துண்டானது. மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இது சந்தேகமில்லாமல் பயங்கரவாதத் தாக்குதல்தான் என தேசிய போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஆன்டன் பச்ருல் ஆலம் தெரிவித்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஒருவருக்கு இந்த வெடிபொருள்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் செய்தித்தொடர்பாளர் கலோனல் பாய் ராஃப்லி அமர் கூறினார்.

மதச்சார்பற்ற இந்த நாட்டில் இஸ்லாமிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என ஒரு பிரிவினர் கோரி வருகின்றனர். சமீப காலங்களில் கிறிஸ்துவர்களையும், இதர சிறுபான்மையினரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

210 மில்லியன் முஸ்லீம்களின் தாயகமான இந்தோனேசியா சமீபகாலமாக பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அல்-காய்தா தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்ற பயங்கரவாதக் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது. 2002-ல் பாலி தீவில் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 202 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
dinamani

No comments:

Post a Comment