islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பணிப்பெண் மீது வெந்நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய கடாபியின் மருமகள்

                                      
லிபிய தலைவர் கடாபியின் மகனது மனைவி அலைன் கடாபியால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் தொடர்பான விபரங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.


எதியோப்பியாவிலிருந்து வேலைவாய்ப்புப் பெற்று ஒரு வருடத்திற்கு முன் லிபியாவுக்கு வந்த ஷவேகா முல்லாஹ் என்ற மேற்படி பெண், கடாபியின் மகன் ஹனிபால் கடாபியின் மனைவி அலைன் கடாபியிடம் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

அவருக்கு ஹனிபால் கடாபியின் சின்னஞ்சிறு மகனையும் மகளையும் பாராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முதல் 6 மாத காலமும் ஷவேகா முல்லாஹ்ஹை நல்ல முறையில் நடத்திய அலைன் பின்னர் அவரை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.

தனது சின்னஞ்சிறு மகள் அழுது அடம்பிடித்தால் சினமடைந்துவிடும் அலைன், குழந்தையின் அழுகையை நிறுத்த தவறியமைக்காக ஷவேகா முல்லாஹ் மீது கொதி நீரை ஊற்றியுள்ளார். இந்நிலையில் ஷவேகா முல்லாஹ் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதன்பின் 3 மாதங்கள் கழித்து இதையொத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அலைன் ஷவேகா முல்லாஹ்ஹை குளியலறைக்கு இழுத்து ச்சென்று அவரது கைகளையும் கால்களையும் கட்டி வாயை அடைத்துவிட்டு கொதிக்கும் நீரை தலை மீது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சித்திரவதை செய்துள்ளார்.

இத்தாக்குதலையடுத்து ஷவேகா முல்லாஹ்ஹின் தலையில் புண் ஏற்பட்டு புழுக்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் எவரும் பார்க்காத வண்ணம் ஷவேகாவை மறைந்திருக்க அலைன் கட்டாயப்படுத்தியுள்ளார். எனினும் காவலர் ஒருவர் ஷவேகாவின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் பங்களாதேஷை சேர்ந்த அக்காவலரை சிறையில் அடைக்கப்போவதாக அலைன் அச்சுறுத்தியுள்ளார். அக்காவலரும் பல தடவைகள் தாக்கப்பட்டு காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.

தனக்கு தெரியாமல் சிகிச்சை பெற்றதற்கு தண்டனையாக அலைன், ஷவேகாவை 3 நாட்களாக வசிப்பிடத்துக்கு வெளியே குளிரில் உணவும் உறக்கமுமின்றி இருக்க வைத்துள்ளார்.

தனக்கு உணவு அளிக்க மறுத்த அலைன், தான் பார்த்துக் கொண்டிருக்க நாய்களுக்கு உணவளித்ததாக ஷவேகா கூறினார். தான் கடாபியின் குடும்பத்துக்காக பணியாற்ற ஆரம்பித்த இந்த ஒரு வருட காலத்தில் தனக்கு ஒரு மாதமும் ஊதியமாக வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment