இளம்பெண் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பிளஸ் 2 மாணவனுக்கு போலீஸ் துணை கமிஷனர் புத்திமதி கூறி எச்சரித்தார்.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ராணி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. ராணியின் செல்போனுக்கு கடந்த 3 நாட்களாக அறிமுகம் இல்லாத ஒரு எண்ணில் இருந்து ஹலோ, சௌக்கியமா என எஸ்எம்எஸ்கள் வந்துள்ளன. அறிமுகம் இல்லாத எண் என் பதால் ராணியும் எஸ்எம்எஸ்க்கு பதிலளிக்கவில்லை.
அடுத்த நாள் ஆபாசமாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. போன் செய்தால் பேச வேண்டும் என மிரட்டியும் எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் பயந்த ராணி, எஸ்எம்எஸ் வந்த எண்ணில் பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் ஆபாசமாக பேசியுள்ளார். மூன்று நாட்களுக்கும் மேலாக தொல்லை தொடரவே நேற்று ராணியின் தந்தை போலீஸ் துணை கமிஷனர் சத்யபிரியாவிடம் போனில் புகார் செய்தார்.
துணை கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட எண்ணின் முகவரியை ஒரு சில மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். அவர் கிச்சிபாளையத்தை சேர்ந்த சந் திரன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் என்பது தெரியவந்தது. உடடினயாக சந்திரனை பிடித்து, கிச்சிபாளையம் போலீசார் விசாரணைக்காக கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், ‘தெரியாமல் செய்துவிட்டேன், இனிமேல் தவறு செய்யமாட்டேன்‘ என சந்திரன் அழுது புலம்பினான். மாணவன் என்பதால் ராணியின் தந்தையும் மனமிரங்கி புகாரை வாபஸ் பெற்றார். துணை கமிஷனர் சத்யபிரியா மாணவன் சந்திரனுக்கு புத்திமதி கூறினார்.
மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. குழந்தைகளின் செயல்கள் அனைத்தும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறான செயல்களில் மாணவர்கள் ஈடுபடமாட்டார்கள் என துணை கமிஷனர் சத்யபிரியா தெரிவித்தார்.
No comments:
Post a Comment