ஜெர்மனியில் பார்க்கிங் மீட்டர் போல செக்ஸ் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள பான் நகரில் இரவு 8.15 முதல் 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டப்படி அனுமதி உள்ளது.
பதிவு செய்யப்பட்ட கிளப்கள் மூலம் விபசாரம் செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படுகிறது. தெருக்களில் தொழிலை நடத்தும் பாலியல் தொழிலாளர்களுக்கும் வரி விதிக்கும் வகையில் செக்ஸ் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில் இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இரவு முழுவதும் இந்த டிக்கெட் செல்லுபடி ஆகும். டிக்கெட் இல்லாமல் பாலியல் தொழிலாளி போலிசிடம் சிக்கினால் அவருக்கு கடும் அபராதமோ அல்லது தொழில் செய்ய தடையோ விதிக்கப்படும்.
இதுபற்றி பான் நகர கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் மோனிகா போம்ஜென் கூறும் போது,"பானில் 200க்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு டேக்ஸ்(வரி) டிக்கெட் விற்கப்படுவது இதுவே முதல்முறை" என்றார்.
No comments:
Post a Comment