பாகிஸ்தானில் குண்டுவெடித்ததில் 22 பேர் பலி--டெல்லி உயர் நீதிமன்ற குண்டு வெடிப்பு: 11 பேர் பலி, 62 பேர் காயம்
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான குவெட்டாவில் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட கமிசனர் அலுவலகத்தில் குண்டுவெடித்தது. இதில் 22 பலியாயினர். 40 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ராணுவ அதிகாரியே குறி வைத்து நிகழ்த்தப்பட்டது. ஆனால் இதில் ராணுவ அதிகாரியின் மனைவி, குழந்தைகள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 22 பலியாயினர். 40 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அல்-கொய்தா அமைப்பு பெறுப்பேற்றுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற 5-வது கேட் அருகே இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கம் போல் இன்று காலை நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது உயர் நீதிமன்றத்தின் 5-வது கேட் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து நீதிமன்றம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியானார்கள். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா ஆகிய மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.
சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சகம் நிலைமை குறித்து விவாதித்து வருகிறது. டெல்லி போலீஸ் கமிசனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். ஒரு பிரீப்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ நடந்த இடத்தில் குண்டுவெடிப்பிற்கான தடயங்களை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி), தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தினைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி முழுவதையும் போலீசார் தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவந்துள்ளனர். கடந்த 4 மாதங்களில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த 2-வது குண்டுவெடிப்பு என போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 25-ம் தேதி இதே போன்று டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஹர்கத்-உல்- ஜிகாதி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த 20 பேர் கொண்ட குழுவினை தேசிய புலனாய்வு அமைப்பான (என்.ஐ.ஏ) நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment