islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

போலி பாதிரியார்கள் மக்களே உஷார்!!



கிருஸ்துவ மதத்தைத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் காப்பகம் வைத்து ஏழை குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் காப்பாற்றுகிறோம் என்றகூறி வெளி நாட்டில் இருந்து பல கோடி கணக்காண பணத்தையும்பெற்றுக்கொண்டு சிறிதளவு பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு , அவர்களின் குழந்தைகளை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக ஆக்குகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி காப்பகம் என்ற பெயரில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்தோ அல்லது சொந்தமாக விலைக்கு வாங்கியோ அங்கு ஆண்,பெண் குழந்தைகளை சேர்த்து அவர்களிடம் தவறாக ந்டந்து கொண்ட பாதிரிமார்களை காவல் துறை கைது செய்த கதைகள் ஏற்கனவே பல முறை தமிழகத்தில் நடந்துள்ளது.


அந்த வகையில் மேலும் ஓர் சம்பவம், நெல்லைமாவட்டம்வள்ளியூர்அருகே சின்னம்மாள் புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இங்கிலாந்து பாதிரியார் ஜோனகன் ராபின்சன் முறைகேடுகள் செய்தார், பாலியல் தொந்தரவு கொடுத்தார், அதுபற்றி வழக்கு பதிவானதையும, விசாரணைக்குப் பின்பு அதிகாரிகளால் அந்த காப்பகம் மூடப்பட்டிருந்தாகவும் ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது,

இதற்கிடையே அந்த காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டதை விரிவாகவே விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன விசாரணையில் இருக்கும் அநத் காவல் அதிகாரி நம்மிடம் பதைப்பதைப்போடு அந்த பிஞ்சுகள் சொன்னதை கூறினார்.

இந்த காப்பத்தில் இருக்கும்போது, சில வெளிநாட்டினர் வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் எங்களுக்கும் குளிர்பானங்கள் கொடுத்தார்கள். சாப்பிட்டவுடனேயே நாங்கள் மயக்கம் அடைந்துவிடுவோம். அதன்பிறகு என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியாது என்று அந்த வாக்குமூலம் கொடுத்ததை கேட்டு, நாங்கள் பதறிப்போனோம் என்கிறார் அந்த அதிகாரி.


தற்போது அந்த காப்பகத்தை நடத்தி வரும் நில நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர்களிடம் காப்பகத்திற்கு எதிராக ஏதேனும் புகார் கொடுத்தால் உங்களுக்கு கொடுக்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று கூறிய தகவல் போலீஸ் வரை செல்லவே, போலீஸ் அந்த நிர்வாகிகளை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.


மேலும், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வங்கிக் கணக்குகள் மூலம் செய்த வரவு செலவு மற்றும் அந்நிய செலாவணி போன்றவைகளை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மும்பை குழந்தைகளிடம் பாலியல் தொந்தவு கொடுத்ததாக மும்பை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டங்ஸ்சன் அலெக்ஸ்ஸாண்டர் இந்த காப்பகத்தில் வந்து தங்கியிருந்தது குறித்தும், அவரது வழக்கு தொடர்பாக இங்கிருந்து பணப்பட்டுவாடா எதுவும், நிர்வாகிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது பற்றி போலீசும், கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகின்றனர்.      
       
இது போன்ற சம்பவங்களை எத்தனை முறை நாம் கேள்விப்பட்டாலும்,இதையெல்லாம் புறம் தள்ளி அவர்கள் காட்டும் பணத்திற்கு மயங்கி மக்கள் மதம் மாறுகின்றனர். இதனால் பல குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது.

மதம் மாறுவதாக இருந்தால் உண்மையிலேயே இந்த உலகத்தில் மட்டுமல்லாமல் நாம் இறந்ததற்கு பின்னும் பலன் தரக்கூடிய விதத்தில் அந்த மதத்தின் கோட்பாடுகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து அந்த மதத்தை ஏற்றுக்கொள்ளும் போது நமக்கும் நமது வாரிசுகளுக்கும் உண்மையாகவே இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும்.

இன்றைக்கும் பண ஆசை காட்டி, படிப்பு ஆசை காட்டி, இஸ்லாத்தை பரப்பாமல் இருப்பதால் இஸ்லாத்தில் இணையக்கூடிய மக்கள் இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக்கொள்வதால் உலகில்  இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்க்ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது அல்ஹம்துலிலாஹ்!!!.....

அ.அப்துல் வஹாப், சேலம்.

No comments:

Post a Comment