islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாட்டில் மது விற்பனை : 15 ஆயிரம் கோடி வருமானம்









                                      


மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.


சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்தார்.

அதில்,   ‘’மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அரசுக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தரும் துறையாகும். 2009-2010-ம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாயாக ரூ.6,740.59 கோடியும், விற்பனைவரியாக ரூ.5,757.63 கோடியும் ஆக மொத்தம் ரூ.12,498.22 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

2010-2011-ம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாயாக ரூ.8,115.90 கோடியும், விற்பனை வரியாக ரூ.6,849.52 கோடியும் ஆக மொத்தம் ரூ.14,965.42 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு வருவாயுடன் ஒப்பிடும் போது 19.74 சதவீத வளர்ச்சியாகும்.

தற்போது தமிழ்நாட்டில் 6,690 மதுபான சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வருகிறது. 3,562 சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. 3,128 சில்லரை விற்பனை கடைகள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சில்லறை மதுபான கடைகளில் 6,670 மேற்பார்வையாளர்களும், 16,758 விற்பனையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.


மதுபான சில்லரை விற்பனைக்கடைகளுடன் 4,145 மதுக்கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம், ரூ.ஆயிரம் மதிப்புள்ள 1,50,000 பங்குகளை கொண்டு, ரூ.15 கோடி பங்கினை மூலதனமாக கொண்டுள்ளது. இந்த பங்கு மூலதனம் ரூ.15 கோடியை அரசு முழுவதுமாக வழங்கியுள்ளது’’ என்று  கூறப்பட்டுள்ளது. 








No comments:

Post a Comment