இஸ்லாமிய தீவிரவாதத்தால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறினார்.
அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலுக்கு பின்னர் இந்த அச்சுறுத்தல் உள்ளது என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்தார்.
கனடா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் பல்வேறு தரப்பில் இருந்தும் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை பிரதமர் அளித்த நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் நார்வேயில் முஸ்லீம்களை வெறுத்த 32 வயது நார்வே இளைஞர் பெர்விக் ஆண்டர்சன் 77 பேரை கண்மூடித்தனமாக கொன்றதையும் அவர் தெரிவித்தார்.
உலக நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் மிக உச்ச நிலையில் இருப்பதை மறுக்க முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்லாமிய தீவிரவாதம் என்றவுடன் மக்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலையும் இதர மத்திய கிழக்கு நாடுகள் தாக்குதல் குறித்தும் நினைக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் உலக நாடுகளில் அனைத்திலும் உள்ளது. இது தான் உண்மை என அவர் கூறினார்.
No comments:
Post a Comment