islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நுரையீரல் பாதிக்கும் வேகம் ஒரு கொசுவர்த்தி 100 சிகரெட்டுக்கு சமம்

                                    
பருப்பு, எண்ணெய் என்று வீட்டு மளிகை பட்ஜெட்டில் கொசுவர்த்தி சுருள்களும் சேர்ந்து விட்டன. ஒவ்வொரு வீட்டிலும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றுகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக கொசுவர்த்தி சுருள் ஏற்றாமல் இருப்பதில்லை. ஏசி அறையாக இருந்தாலும் கொசுவர்த்தி சுருள் புகை மண்டிய நிலையில் தான் தூங்குகின்றனர்  பலர். இப்படி கொசுவர்த்தி சுருள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று நடுத்தர மக்கள் நினைக்கும் அளவுக்கு கொசுக்களால் அவர்கள் படும் பாடு பரிதாபமாக உள்ளது.



 எல்லாரும் ‘பேட்’டும் கையுமாக தான் வீட்டில் அலைய வேண்டியிருக்கிறது. ‘பேட்’ என்றவுடன் கிரிக்கெட் வீரராகி விட்டதாக நினைக்க வேண்டாம். ‘மஸ்கிடோ பேட்’ அது. கொசுக்கள் சிக்கி ‘பட் பட்’ என்று வெடித்தால் அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே சதம் போட்டது மாதிரி. இப்படி எல்லாம் கொசுக்களுடன் ஒரு போரை நடத்தி வரும் இந்த நடுத்தர மக்கள் பயன்படுத்தும் கொசுவர்த்தி பற்றி ஒரு பகீர் மருத்துவ  ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.

மலேசியாவில் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில்,‘சிகரெட் பிடித்தால் நுரையீரல் பாதிக்கிறது  என்று பல ஆண்டுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால், ஒரு கொசுவர்த்தி சுருள் ஏற்றி அதை மனிதன் நுகர்ந்தால், சுவாசத்தில் கலந்தால், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமானது. 100 சிகரெட் பிடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அதை ஒரு கொசுவர்த்தி சுருள் செய்து விடும்.

டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் சார்பில் ‘காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய சர்வதேச கருத்தரங்கு சமீபத்தில் நடந்தது. அதில் மருத்துவ நிபுணர் சந்தீப் சால்வி பேசும்போது, மலேசிய ஆய்வு அறிக்கை பற்றி விளக்கினார்.

‘டெல்லி உட்பட பெரு நகரங்களில் மக்கள் காற்று மாசுக்களால் படும் பாடு அதிகம். இதனுடன் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக உள்ளது. இதற்காக பலரும் கொசுவர்த்தி சுருள்களை தான் நாடுகின்றனர். சிகரெட் போல இதுவும் ஒரு அடிமையாக்கும் பொருளாகி விட்டது’ என்றார். ‘சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக இந்திய டாக்டர்கள் பல ஆய்வுகளை செய்து அறிக்கைகளை வெளியிட்டால் தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்’ என்றும் அவர் எச்சரித்தார்.

No comments:

Post a Comment