islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

அமெரிக்காவின் கோர முகம்


இந்த உலகிற்கே நாங்கள்தான் சட்டாம்பிள்ளை, நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று கூறி உலகில் உள்ள(குறிப்பாக முஸ்லிம்) நாடுகளில் தன்னுடைய மூக்கை நுழைத்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு பல லட்சக்கணக்காண அப்பாவி மக்களை கொன்று குவிப்பது அமெரிக்காவிற்கு கை வந்த கலை.

அமெரிக்காவின் இராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலை ஒன்றின் வீடியோவை ''விக்கி லீக்ஸ்'' இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது என்றாலும் அது அமெரிக்க இராணுவத்தால் எடிட் செய்யப்பட்டு அவர்களுக்குச் சாதகமான முறையில் வெளியானது.

ஆனால் இந்த எடிட் செய்யாத வீடியோவை ''விக்கி லீக்ஸ்'' (சென்ற வருடம்)வெளியிட்டுள்ளது உலக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நடக்கும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் தாம் குரல்கொடுப்போம் என்று கூறிவரும் அமெரிக்கா சமீபகாலமாக போர் குற்றங்களுக்கும் எதிராகக் குரல்கொடுத்து வருவதாகவும் தன்னை உலகிற்கு காட்டி வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தினர் நிகழ்த்தியுள்ள போர் குற்றங்களை யார் கேட்பது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 17 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைக்கும்.

இந்த வீடியோ ''யூ டியூப்'' (you tube)இணைய தளத்தில் (Collateral Murder - Wikileaks - Iraq ) http://www.youtube.com/watch?v=5rXPrfnU3G0&feature=player_embedded என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றின் மேல் பறந்த அமெரிக்க ''அப்பாச்சி'' ரக ஹெலிகாப்டர், அங்கே நின்றிருந்த 12 பொதுமக்களை சுட்டுப் படுகொலைசெய்துள்ளது.

இதில் சயீத், நமீர் என்ற இரண்டு ''ராய்ச்சர்ஸ்'' செய்திச் சேவையின் செய்தி சேகரிப்பவர்களும் அடங்குவர். அவர்கள் தங்கள் கைகளில் காமெராக்களை வைத்திருந்தது கூட தெள்ளத் தெளிவாக அமெரிக்க ஹெலிகாப்டரில் இருந்த பாதுகாப்பு காமெராவில் பதிவாகியிருக்கிறது.

பறவை போலப் பறந்து பறந்து ஒவ்வொருவராகச் சுட்டுத் தள்ளி, பின்னர் குற்றுயிரும் குலையுமாக இருக்கும் மற்றவர்கள்  எழும்போது குறிவைத்து தாக்குகிறது அமெரிக்க ஹெலிகாப்ட்டர்.

இதுமட்டுமட்டுமா ? தரையில் இருப்பவர்கள் கைகளில் எவ்வித ஆயுதங்களும் இல்லாத நிலையில் , காயம்பட்டவர் எழுந்து தப்பி ஓடப்பார்க்கும்போது, அவர்கள் ஆயுதங்களை எடுக்கவே ஓடுவதாக அமெரிக்க ஹெலிகாப்ட்டரில் இருக்கும் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கிறார்.

இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது. இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்தும் தாக்குதலை நடத்துகிறார்கள். இறுதியில் தரைப் படையினர் அவ்விடத்துக்கு வரும்வேளை அங்கே 2 சிறுமிகள் காயப்பட்டு இருக்க அவர்களை அருகில் உள்ள அமெரிக்க இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை கொடுக்க ஒரு இராணுவ வீரர் அனுமதிகேட்க்கிறார்.

ஆனால் அவர் மேலதிகாரி இல்லை என மறுத்து, அச் சிறுமிகளை ஈராக் போலிசாரிடம் கொடுங்கள் என்று இரக்கமற்று தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. அக்குழந்தைகள் ஆம்புலன்ஸில் இருக்கும் போதே அமெரிக்க இராணுவத்தினர் தாக்குதல் நடத்தும் காட்சியும் பதிவாகி உள்ளது.

தாக்குதல் நடத்தும் வேளையில் அமெரிக்கர்கள் பயன் படுத்தும் சொற்கள் மிகுந்த இனவெறிகொண்டதாக இருப்பதோடு, பல தகாத வார்த்தைகளையும்,ஆபாசமான வார்த்தைகளையும் உபயோகிக்கின்றனர். ஹெலிகாப்ட்டரில் பொருத்தப்பட்ட காமெரா மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ஒரு இராணுவ அதிகாரி ஈராக்கில் இருந்து திருடி வந்து வெளியிட்டுள்ளார்.

அவரை அமெரிக்க இராணுவப் போலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த 17 நிமிட வீடியோவை முழுமையாகப் பார்த்தால் அமெரிக்க இராணுவத்தின் கோரமுகம் தெரியும்.

இஸ்லாத்தை இந்த உலகில் புணர் நிர்மாணம் செய்ய வந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போர்க்களத்தில் கூட குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதை தடை செய்தார்கள்.

ஆனால் தெருவில் செல்லும் அப்பாவி பொது மக்களைக்கூட ஆடு மாடுகளைப்போல் சுட்டுக்கொல்லும் அமெரிக்காவின் அநியாயத்திற்கு கூடிய விரைவில் அல்லாஹ் முற்றுப்புள்ளி வைப்பான்.

 “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
அல்-குர் ஆன் (3-26)

அ.அப்துல் வஹாப், சேலம்.

No comments:

Post a Comment