2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குண்டுவெடிப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி, கிரிமினல் சதியாலோசனை, சட்டவிரோத நடவடிக்கை ஆகிய கூடுதல் குற்றங்களிலிருந்து நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.
இவர்கள் நடத்திய குண்டுவெடிப்புகளில் 8 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இருவரும் தலா ரூ. 9500 தண்டனைத் தொகை கட்டவேண்டும்.
No comments:
Post a Comment