இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிறுபான்மை முஸ்லிம்களை அதிக அளவில் கொடுமைப்படுத்தியும்,கொலை செய்தும் பலவிதத்திலும் கொடுமைப்படுத்தியும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இவரைப்பற்றி ''விக்கி லீக்ஸ்'' என்ற இணையதளம், இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது, ''மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக''அச்செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குஜராத்தின் ''சிறுபான்மையினருக்கு எதிரான முதலீட்டு வர்த்தகத்தை'' பயன்படுத்தி, தேசிய அளவில் மோடி முன்னேறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மோடி பி.ஜே.பி.யின் விருப்பமான ஒரு தலைவராக விளங்குவது மட்டுமல்லாமல் ''பிரதமர் பதவி''க்கு பரிந்துரைக்கப்படும் நபராகவும் திகழ்வதாக அக்கேபிள் தகவல் கூறுகிறது.
இருப்பினும், மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டால், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி.கெதிராக ஒன்று சேரும் என்பதாகவும் அக்கேபிள் தகவல் தெரிவிக்கின்றது.
2005-ம் மறுக்கப்பட்ட அமெரிக்க விசாவினால், மோடி கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதனால் அமெரிக்காவிற்கெதிராக அவர் செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளது.
மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளிப்படையாக செயல்படும் நரேந்திர மோடி போன்றவர்கள் மீண்டும் ஒரு மாநிலத்தில் ஆட்சியை பிடித்த காரணத்தினால்தான் அவர் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்று ''விக்கி லீக்ஸ்'' செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற மத பயங்கர வாதிகள் நாட்டை ஆள்வதற்கு எதிராக மதசார்பற்றவர்கள் ஓர் அணியில் திரண்டு போராட வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையான மத சார்பற்ற நாடாக இருக்கும்.
அ.அப்துல் வஹாப், சேலம்.
No comments:
Post a Comment