islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நரகத்தின் விளிம்பில்.... அல்லாஹ் நேர் வழி காட்டுவானாக......




ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாட வேண்டும். அவர்களின் மீது கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோஷமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து மௌலூது, பாத்திஹா ஒதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றைய தினம் இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரைக்கல்லாக அவன் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போது தான் அந்த செயலுக்கு நன்மை கிடைக்கும். இல்லையேல் அது தீமையாகவே அமைந்து விடும

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.(33:36)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!(ஆயிஷா(ரலி) புகாரி 2697)

நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் (ஆயிஷா (ரலி) முஸ்லிம் 3243)

அனைத்து பித்அத்தான செயல்களுக்கும் சாட்டையடியாக அமைந்த மாநபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை இவைகள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் கெட்டது புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவானவை அனைத்தும் பித்அத்களாகும்.ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (ஜாபிர் (ரலி) நஸயி 1560)

இந்த புகைப்படங்களை பார்த்த பிறகாவது இது போன்ற சகோதரர்களை நரக விழிம்பிளிருந்து காப்பாற்ற நமது பணிகளை வீரியமாக்குவோமாக........

No comments:

Post a Comment