islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது!! - கசிந்தது கோகோ கோலா ரகசியம்!!!......






மென்பானமான கோகோ கோலா தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்களில் ஆல்கஹாலும் ஒன்று என்ற அதன் ரகசியம் அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியொன்று வெளியிட்டுள்ளது.

125 வருடங்களாக மென்பானத் துறையில் கோலோச்சி வருபவைகளாக அமெரிக்கத் தயாரிப்புகளான கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் உள்ளன. வல்லரசின் இராணுவ இரகசியம் போல் பொத்தி வைக்கப்பட்டிருந்த இவற்றின் தயாரிப்பு இரகசியம் (என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்ற விபரம்) தற்போது ஊடகங்களில் வழிந்தோடுகிறது.

முதன் முதலில் கடந்த 1886-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த கோகோ கோலா குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் என்ற அளவில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார்.

125 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் தயாரிப்பு இரகசியம் வெளியாகியுள்ளது. இந்த இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு வானொலி தெரிவித்துள்ளது. பின்னர் ஒரு இணைய தளத்திலும் இவ்விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி கோகோ கோலாவில் ஆல்கஹால் சேர்க்கப்படுவது ஊர்ஜிதமாகிவுள்ளது.
sorce;inneram

No comments:

Post a Comment