islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு-திருச்சி திவ்யா முதலிடம்



பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

இதில் திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தையும், ராசிபுரம் மாணவர் யோக பரசுகன் 2வது இடத்தையும், சென்னை மாணவர் சுரேஷ் பால்ராஜ் 3வது ரேங்க்கையும் பெற்றனர்.

பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்காக மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 355 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றில் சரிவர நிரப்பப்படாத 5246 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 109 பேருக்கு தரவரிசை இன்று வெளியிடப்பட்டது.

தரவரிசைப் பட்டியலை http://www.annauniv.edu/tnea2011/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தம் 494 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களில், ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2011-12 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வு ஜூன் 30ம் தேதி தொடங்குகிறது. அன்று விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

ஜூலை 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தொழிற் படிப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு நடைபெறும். இதையடுத்து ஜூலை 7ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

ஜூலை 8ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி 35 நாட்களுக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment