islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மனிதக் கழிவிலிருந்து உணவு - ஜப்பான் விஞ்ஞானியின் 'உவ்வே..' ஆய்வு



கஞ்சத்தனம் செய்வோரை கிராமப்புறங்களில் "எச்சில் கையால் காக்கை விரட்டாதவன்' என்பர். கருமித்தனம் செய்பரை இன்னும் கேவலமாக "இவனா பேண்ட... __யில் பருக்கை எடுப்பவன்" என்பர். ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் தற்போது மனிதக் கழிவிலிருந்து பருக்கை எடுக்கும் ஆய்வு ஒன்றைச் செய்து பலரையும் வாய் (முக்கை) அடைக்கச் செய்துள்ளார்!


மிட்ஷுயூகி இகெடா என்ற ஓகயாமா ஆய்வக விஞ்ஞானி ஒருவர் மனிதக் கழிவிலிருந்து உணவுப்பொருளுக்கு இணையான சத்துப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிர்வாகம், சாக்கடைக் கழிவிலிருந்து சாத்தியப்படக்கூடிய பயன்பாடுகளை ஆய்வு செய்து தரும்படி கோரியபோது, அவரது ஆய்வில் மேற்கண்ட சமாச்சாரத்தையும் கண்டுபிடித்துள்ளார்!

மனிதக் கழிவிலுள்ள நுண்ணுயிரிகள் தரமான உணவுபொருட்களுக்கு இணையான சத்துப்பொருளை உருவாக்கும் என்பதை தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார். மனிதக் கழிவை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட மாமிசத்தில் 63% புரதம், 25% நார்ச்சத்து,3% திரவச்சத்து மற்றும் தாதுக்களை பிரித்தெடுத்துள்ளார். அவற்றுடன் சோயா மற்றும் நிறமிகளைச் சேர்த்து செய்த உணவை 'உண்டுகளி(ழி)த்த' சுவைஞர்கள் மாட்டுக்கறியைப்போல் சுவையுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மாமிசங்களைப் பதப்படுத்தி விற்பனைக்குத் தயாராக பேக்கிங் செய்யும் நிறுவனங்களில் விலங்குகளிலிருந்து வெளியாகும் மீதேன் வாயுவால், 18% சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மனித உணவுக்கான விலங்குகள் நமது தானிய உற்பத்தியையும் சார்ந்திருப்பதால் உணவு ஒதுக்கீடு குறைவதோடு, இடநெருக்கடியும் ஏற்படுகிறது. மனித உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவது, மிருகவதையாகக் கருதப்படும் பிரச்சாரம் வலுவடைந்து வருவதால், தமது மனிதக் கழிவுக்கறி சரியான மாற்று உணவாக இருக்கும் என்று பேராசிரியர் இகெடா தெரிவித்துள்ளார்.

விலையைப் பொருத்தவரை மாமிசக் கறிக்கு இணையாக இருக்குமாம்! சத்துக்களை பிரித்தெடுப்பதற்கான விலை 10-20 மடங்கு அதிகம் என்பதால் இது ஒன்றும் அதிகமில்லை என்கிறார். மேலும், இகெடா கூறுகையில் மனிதக் கழிவிலிருந்து உணவா? என்ற உளவியல் ரீதியான மனத்தடைகளையும் உணர்ந்துள்ளதாகவும், சுற்றுச்சூழல்மீது அக்கரையுள்ளவர்கள், இத்தகைய மனத்தடைகளையும்மீறி தமது கண்டுபிடிப்பிலுள்ள சத்துக்களையும் கருத்தில் கொண்டால் அவர்களுக்கு விலை ஒரு பொருட்டாக இருக்காது என்கிறார்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஈடுகொடுக்க முடியாதளவில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வணிகமயம் ஆக்கப்படுவதாலும்,எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களால் விளைச்சல்கள் வீணாவதும்,உற்பத்திக்கும் தேவைக்கும் உள்ள அளிப்பு விகிதம் குறைந்து உலகின் சிலபகுதிகள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி அடுத்த 5-10 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கணித்துள்ளதை கவனத்தில் கொண்டால்,நம் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத்தவறுகிறோமோ என்ற குற்ற உணர்வும் ஏற்படுவதை தவிக்கமுடிய வில்லை!

inneram

No comments:

Post a Comment