கல்வி, வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்டவைகளில் சிறுபான்மையின மக்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர அரசாங்கத்திடம் முன் மாதிரி பட்டியல் தயாராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறுபான்மையின மக்களையும் அவர்களது உரிமைகளையும் காப்பதற்காக நிறுவப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து நடப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வரை அபராதமும், 3 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கவும் இந்த கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த முன் மாதிரி சட்டபடிவங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைச்சரவை மூலம் சம உரிமை கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டங்கள், சச்சார் கமிட்டி வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகவும், தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்படும் முஸ்லிம் மக்கள் தங்களது அடிப்படை வசதிகளான கல்வி, வேலை மற்றும் நிலம் போன்றவைகளில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கொண்டுமே இந்தியா முழுவதும் நிறுவப்பட உள்ளது என்றும் செய்தியாளர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment