அமெரிக்க பொருளாதார நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், ஒபாமவின் செல்வாக்கு தற்போது கணிசமாக குறைந்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. அதிபர் ஒபாமாவும், அவரது குடியரசு கட்சிப் பிரமுகர்களும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாசாசூயட்ஸ் மாநில கவர்னர் மிட் ரோனி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறார். அதிக வேலைவாய்ப்புகள், அதிக அளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்படுவதே தன் லட்சியம் என அவர் பிரசாரம் செய்வதால், அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஒபாமா கட்சியிலேயே அவரை முறியடிக்கும் வாய்ப்பாளராக அவர் உருவெடுக்கிறார். “வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி ‘ இணைந்து நடத்திய சர்வேயில், ஒபாமா முக்கியத்துவம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம், வீடுகள் விலை மதிப்பு குறைவு, வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் போக்கு ஆகியவை, மக்கள் மனதில், ஒபாமா அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் வரும் தேர்தலில் பரபரப்பு நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment