பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை நிறுத்திய தில்லி போலீசாரின் செயலுக்கு ஆதரவுதெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், 1994-ம் ஆண்டில் இருந்து அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பாபா ராம்தேவ் பல பேரை ஏமாற்றி உள்ளார். இதுபோன்ற ஒருவருக்கு இந்த வைத்தியம்தான் பொருத்தமானது என சிங் தெரிவித்தார்.
நாட்டில் சில சட்டம், ஒழுங்குமுறைகள் உள்ளன. ராம்தேவ் போன்றவர்கள் தலைநகரில் வன்முறையை ஏற்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. ராம்லீலா மைதானத்தில் அவர் மக்களைத் தூண்டிவிட முயற்சி செய்தார் என திக்விஜய் சிங் தெரிவித்தார்.
2 தினங்களுக்கு முன் ராம்தேவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசியபோது அவருடன் ஒரு உடன்பாடு காணப்பட்டது. ஆனால் அவர் உண்ணாவிரதம் நடத்தி இருக்கிறார். இது அவர் மக்களை முட்டாளாக்கும் மற்றொரு வழிமுறை. ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் ஏமாற்றி உள்ளார் என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.
ராம்தேவ் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது செயல்பாடுகள் குறித்து கண்டிப்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment