islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை


பிரிட்டஷ் மகாராணியின் முடிசூட்டு ஞாபகார்த்த தின அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு குதிரை திடீரென நடை தடுமாறி இடறி விழுந்ததால் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த விழாவைக் காண வந்திருந்த மக்கள் அதிர்ச்சியில் திகைத்துப் போய்விட்டனர். வருடாந்தம் ஜூன் மாதம் இரண்டாம் திகதி இடம்பெறும் மகாராணியின் முடிசூட்டு விழா ஞாபகார்த்த அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியின் போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. இந்தக் குதிரையின் பெயர் மேர்பி.

அரச அணிவகுப்பு படைப் பிரிவைச் சேர்ந்தது. லண்டன் ஹைட்பார்க்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. படை வீரர்கள் அணிவகுப்புக்குக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மெள்ள மெள்ளத் தாவி வந்த இந்தக் குதிரையின் கால்கள் நிலை தடுமாறி பீரங்கி பொருத்தப்பட்டிருந்த வாகனத்தின் சில்லுகளுக்குள் சிக்கிக் கொண்டன.



இந்த நேரம் பார்த்து அந்த வண்டி ஓடியதால் குதிரை அதற்குள் நன்றாகவே மாட்டிக் கொண்டது. அதிலிருந்து காலை எடுக்கும் முயற்சியில் குதிரை நிலைதடுமாறி கீழே புல் தரையில் இழுபட்டுச் சென்றது.

படைவீரர்கள் குதிரையை நெருங்கிய போது அது மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மிருக வைத்திய நிபுணர்கள் உடனடியாக ஸ்தலத்துக்கு வந்து பார்த்த போது அதன் கால்களில் பல முறிவுகள் ஏற்பட்டிருந்தன.



வேறு வழியின்றி இந்த மாதிரி நிலைக்கு ஆளாகின்ற ஏனைய எல்லாக் குதிரைகளுக்கும் ஏற்படுகின்ற முடிவு இந்தக் குதிரைக்கும் ஏற்பட்டது. அதற்கு மேலதிக வலி எதுவுமின்று ஊசி மருந்து மூலம் மரணம் ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் இந்தக் காட்சியைக் காணாமல் இருப்பதற்காக பச்சை நிறப் போர்வை ஒன்று போர்த்தப்பட்டே ஊசி மருந்து ஏற்றப்பட்டது. ஆனாலும் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து காணப்பட்டனர்.

மக்கள் மட்டுமன்றி இங்கு வந்திருந்த படை வீரர்கள் கூட இதைப் பார்த்து கதிகலங்கிவிட்டனர். அவர்கள் எல்லோரது முகத்திலும் வேதனை குடிகொண்டது.

மேர்பி இந்தப் படைப்பிரிவில் நீண்ட காலம் அங்கம் வகித்த ஒரு குதிரையாகும். அதற்கு இந்தக் கதி ஏற்பட்டது. பெரும் கவலை அளிக்கின்றது. ஆனால் இதைத் தவிர வேறு வழியும் கிடையாது என்று அதிகாரிகள் கூறினர்.


-NEWSONEWS

No comments:

Post a Comment