islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ராம் தேவ் உண்ணாவிரதம்: பந்தலுக்கு தீ வைப்பு-டெல்லிக்கு வெளியே ராம் தேவ்


கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக 04.06.2011 அன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் ‌‌போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது.

மத்திய அரசுடன் உடன்பாடு ஏற்படாததால் ராம் தேவ் தொடர்ந்து உண்ணாவிரதத்ததில் ஈடுபட்டார். இந்நிலையில் நள்ளிரவில் மைதானத்தை சுற்றி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இவர் கைது செய்யப்படுவார் என்ற பதட்டத்தை தொடர்ந்து போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரை கலைத்தனர். போராட்ட பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும் பதட்டம் நிலவியது. போராட்டத்திற்கான அனுமதியும் ரத்து ‌செய்யப்பட்டது.தொடர்ந்து போலீசார் ராம்தேவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

ராம் தேவ் டெல்லிக்கு வெளியே விடப்பட்டதாக தெரிகிறது. மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்திற்கு வரும் அனைத்து வழிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


உண்ணாவிரத பந்தல்கள் கலைக்கப்பட்டு விட்டது. ஆதரவாளர்கள் அமைதிகாக்கும் படி பாபா ராம் தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.‌ யோகா பயிற்று விப்பதற்காக மட்டுமே மைதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்காக அனுமதி வழங்க வில்லை என மாநில அரசுதெரிவித்துள்ளது. பாபாராம் தேவ்கைது செய்யப்படவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


அதே சமயம் பாபா ராம் ‌தேவ் மீண்டும் ஹரித்துவார் நகருக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்பேதாதைய நிலவரப்படி பாபா ராம்தேவ் தலைநகர் டெல்லியில் இல்லை என்பது மட்டும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment