islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உ.பி.,யில் தனித்துப் போட்டி: பா.ஜ., அறிவிப்பு - ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது.



உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது. உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும், பா.ஜ., அறிவித்துள்ளது.


பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று உ.பி., மாநிலம், லக்னோவில் துவங்கியது. இதில், கட்சித் தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது:அயோத்தியில் மிகப் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. உ.பி.,யிலும், ஒட்டு மொத்த இந்தியாவிலும், ராம ராஜ்ஜியத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். லக்னோவில் இருந்து, ஐந்து முறை லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர், வாஜ்பாய். எங்களின் மதிப்புக்குரிய தலைவர் அவர்.உடல் நல பிரச்னை காரணமாக, இந்த கூட்டத்துக்கு அவரால் வர முடியவில்லை. அவர் விரைவில் குணமடைவதற்காக, இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். எதிரிகளே இல்லாத "அஜாதசத்ரு' என்று அழைக்கப்பட்ட அரசியல் தலைவர் வாஜ்பாய். நேற்று (நேற்று முன்தினம்) கூட, வாஜ்பாயை சந்தித்து பேசினேன். உ.பி.,யில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவோம். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள், காங்கிரசின் நட்புக் கட்சிகளாக உள்ளன.இவ்வாறு கட்காரி கூறினார்.

தேசிய செயற்குழு கூட்டம் குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:ராமர் கோவில் விவகாரம் என்பது, பா.ஜ.,வின் அரசியல் பிரச்னை அல்ல. இன்றைய கூட்டத்தில், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில், அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை, கட்காரி கோரினார். உ.பி.,யில் தேர்தலுக்கு முன்போ, அல்லது தேர்தலுக்கு பின்னரோ, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதை, கட்காரி வலியுறுத்தினார்.உடல் நலக் குறைவால் வாஜ்பாய் பாதிக்கப்பட்டுள்ளது, கட்சியின் வளர்ச்சிக்கு பின்னடைவாக உள்ளது. "லக்னோ வழியாக, டில்லியை பிடிக்கலாம்' என்பது வாஜ்பாய் முன்பு வெளியிட்ட மிகவும் புகழ்பெற்ற அறிக்கை. எனவே, வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கவுள்ள உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபடும்.சி.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை, பா.ஜ., ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதற்காக, காங்கிரஸ் பயன்படுத்துகிறது. காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள கவர்னர்கள், அந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு பெரும் தடையாக உள்ளனர்.இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

No comments:

Post a Comment