ஐக்கிய முற்போக்க்கு கூட்டணி அரசுடன் பகிரங்கமாக மோதலுக்கு தயாரான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவிற்கு பதிலடிகளை கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டக்கூட காசு இல்லாமல் வெறு ஒரு சைக்கிளுடன் திரிந்த பாபா ராம்தேவ் 10 ஆண்டுகளில் ஹெலிகாப்டருக்கும், வெளிநாட்டில் தீவு ஒன்றிற்கும் சொந்தக்காரனாக மாறியதன் பின்னணியை குறித்து அமலாக்க பிரிவின் இயக்குநர் விசாரணை நடத்துவார்.
பிரிட்டன், கனடா மற்றும் நேபாளத்தில் பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளைகள், அமெரிக்காவில் பதஞ்சலி யோகா ஃபவுண்டேசன் மூலமாக வரும் கோடிக்கணக்கான சொத்துக்களைக்குறித்து முக்கிய மாக விசாரணை நடைபெறும்.ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள தீவு ஒன்றில் சர்வதேச தலைமையகத்தை கட்டுவதற்கு பாபா ராம்தேவ் திட்டமிட்டிருந்தார். லிட்டில் கம்ப்ரெ என்ற சிறு தீவை பாபாராம்தேவ் இதற்காக 20 லட்சம் பவுண்ட் தொகையை அளித்து வாங்கியுள்ளார்.
ஆயுர்வேத சிகிட்சையும், மசாஜும் துவங்க அவர் திட்டமிட்டிருந்தார். 18 மாதத்திற்குள் புனித யாத்ரீகர்கள் வரத்துவங்குவார்கள் என ராம்தேவ் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் ஹூஸ்டனில் 600 கோடி ரூபாய் செலவில் ஆசிரமம் நிறுவப்படுகிறது. இதற்காக 300 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய அளவிலான திவ்ய யோகா மந்திர், பதஞ்சலி யோகாபீடம், பாரத் ஸ்வாபிமான் ஆகிய 3 அறக்கட்டளைகள் விசாரணையின் வரம்பிற்குள் வரும்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் ராம்தே சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
-ஹரித்துவாரில் பரந்துவிரிந்த 500 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள ராம்தேவின் தலைமையகம்
-மேலும் ஹரித்துவாரில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 501 ஏக்கர் நிலம்
-ஹரித்துவாரில் 100 ஏக்கர் நிலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் உருவான ஆசிரமம்
-ஹரித்துவாரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பூங்கா
-ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 20 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான 96 ஏக்கர் நிலம்
-ஆயுர்வேத மருந்து விற்பனை மூலம் மாதம் 25 கோடி ரூபாய் வருமானம்
-யோகா நூல்கள், சி.டிக்கள் மூலம் 10 கோடி வருமானம்
-தினமும் 31 தொலைக்காட்சி சேனல்களி ராம்தேவின் யோகா பயிற்சி முறைகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
-பதஞ்சலி அறக்கட்டளையில் கார்ப்பரேட் உறுப்பினராக சேர கட்டணம் ரூ.11 லட்சம்
பொது உறுப்பினராக சேர கட்டணம் ரூ.11 ஆயிரம்.
இதனை தவிர ஐந்து லட்சம், இரண்டரை லட்சம், ஒரு லட்சம், 51 ஆயிரம், 21 ஆயிரம் மதிப்பிலான கட்டணங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
யோகாவுக்கு எய்ட்ஸையும், ப்ராண பயிற்சிக்கு புற்றுநோயையும் குணப்படுத்த இயலும் ராம் தேவ் கூறுகிறார்.
நோயாளிகளுக்கு தவறான நம்பிக்கை அளித்து யோகா நடத்துவதற்கு முன்பு இந்திய மருத்துவ கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
சர்ச்சைக்குரிய நபராக மாறிய பி்றகும் ராம்தேவிற்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.ராம்தேவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து சர்ச்சை கிளம்பும் போது அவரை பாதுகாக்க முன்வருவது விசுவ ஹிந்து பரிஷத்தும், பா.ஜ.கவுமாகும்.
No comments:
Post a Comment