islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஜிப்மர் எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்காக நடந்த நுழைவுத் தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

÷இக் கல்லூரிக்கான சேர்க்கைக்காக நாடு முழுவதும் 11 நகரங்களில் 50 இடங்களில் கடந்த 5-ம் தேதி நுழைவுத் தேர்வு நடந்தது. இப் படிப்பில் சேருவதற்காக 37,731 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 28,104 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர்.

÷இந்நிலையில் நுழைவுத் தேர்வு முடிவை ஜிப்மர் நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் தகுதி அடிப்படையில் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

÷இதைத் தவிர நுழைவுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் மதிóப்பெண் அடிப்படையிலான பட்டியல் இன்னும் 2 நாளில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று இக் கல்லூரியின் டீன் டாக்டர் கே.எஸ். ரெட்டி கூறியுள்ளார். இணையதள முகவரி: www.jipmer.edu.in.

இக் கல்லூரியில் உள்ள இடங்களும் இட ஒதுக்கீடும்: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 இடம், பொது 33, இதர பிற்பட்டோர் 17, தாழ்த்தப்பட்டோர் 10, பழங்குடியினர் 7, புதுச்சேரி பொது 17, புதுச்சேரி இதர பிற்பட்டோர் 9, புதுச்சேரி தாழ்த்தப்பட்டோர் 5.

இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டோர் 12.7.2011 மற்றும் 13.7.2011-ல் நடைபெறும் கவுன்சலிóங்கில் பங்கேற்க வேண்டும்.

÷அப்போது அனைத்து உண்மை சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். நுழைவுத் தேர்வு எழுதியபோது கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டதை சோதனை செய்தப் பிறகும், உண்மை சான்றிதழ்கள் பரிசோதனை செய்தப் பிறகும் தற்காலிக சேர்க்கை வழங்கப்படும். சேர்க்கை நடைமுறைகள் முடிந்தப் பிறகு எம்பிபிஎஸ் வகுப்புகள் 22.7.2011-ல் தொடங்கும் என்று டீன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment