islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பீகார்:காவி கறைபடிந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்-6 அப்பாவி முஸ்லிம்கள் பலி




muslim child
பாட்னா:பீகார் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்த நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பதவியேற்று 6 மாதம் முடிவடையும் முன்னரே முஸ்லிம்கள் மீது பயங்கரவாத தாக்குதல் கட்டவிழ்த்துவிட்டப்ப்பட்டுள்ளது.



முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது இரண்டு வெவ்வேறான சம்பவங்களில் காவி சிந்தனைக் கொண்ட பீகார் காவல்துறை கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அராரியா மாவட்டத்தில் உள்ள போப்ஸ்கஞ்ச் பகுதியில் ராம்பூர் மற்றும் பஜன்பூர் கிராமங்களை சார்ந்த முஸ்லிம்கள் ஜூன் 3-ஆம் தேதி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தொழிற்சாலை ஒன்று தங்கள் கிராமத்திற்கு இடையேயான சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனக்கூறி போலீஸார் துப்பாக்கியால் சுட துவங்கினர்.

மேலும் முஸ்லிம்களை விரட்டி சென்று அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கியால் மிக அருகிலிருந்து சுட்டுத்தள்ளியுள்ளனர். இதில் இரண்டு பெண்கள், ஆறுமாத குழந்தை உட்பட 6 பேர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். அரசு தரப்பு 4 பேர் இறந்ததாக கூறுகிறது. ஆனால் twocircles.net இணையதளம் கொல்லப்பட்ட 6 பேர்களின் உடல்களை வீடியோவில் பதிவுச்செய்துள்ளது.

மரணித்தவர்களின் உடல்களில் குண்டு துளைத்த காயங்கள் போலீசாரின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. தலை, முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. இந்த காயங்களை பார்க்கும் போது போலீஸ் மிக அருகிலிருந்து சுட்டது நிரூபணமாகிறது. மேலும் வீடுகளின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் குண்டு துளைத்த அடையாளங்கள் உள்ளன.
அராரியா மாவட்டத்தில் சங்க்பரிவாரின் ஆதிக்கம்

இம்மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 41 சதவீதமாக இருந்த போதிலும் பலவருடங்களாக பா.ஜ.க வேட்பாளர்களே எம்.எல்.ஏக்களாகவும், எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்ட ஏராளமான கூட்டங்கள் இம்மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.

சமீபத்திய பிரச்சனைக்கு காரணமான தொழிற்சாலையும் பா.ஜ.க எம்.எல்.சி அசோக் அகர்வாலின் மகனுக்கு சொந்தமானதாகும். நிதீஷ்குமார் ஆட்சிக்கு வந்த பிறகு போலீசாருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிவில் உரிமைகளை மீறி வருகிறார்கள் என ஜமாஅத்தே இஸ்லாமியின் நய்யாருஸ்ஸமான் கூறுகிறார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி தற்போது போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த பகுதியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள இதே மாவட்டத்தின் குர்ஷகந்தா பகுதியில் பட்ரஹா கிராமத்தில் SSB ஜவான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்பு இரவு SSB ஜவான்கள் தங்கியிருந்த கிராமத்தில் நுழைந்து வீடுகளிலுள்ள பெண்களிடம் மோசமாக நடந்துள்ளனர். இதனை கண்டித்து முஸ்லிம்கள் போராடிய பொழுதுதான் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 4 முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

முஸ்லிம்கள் உரிமைகளுக்காக போராடினால் துப்பாக்கிச்சூடுதான் பரிசா?
மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளுக்காகவே போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், காவி கறைபடிந்த பீகார் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கியுள்ளது. பெரும்பாலான பத்திரிகைகள் இச்செய்தியை இருட்டடிப்பு செய்கின்றன. பாபா ராம்தேவ் நடத்திய ஹைடெக் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மிருதுவான நடவடிக்கை எடுத்த உடனேயே கூக்குரலிடும் ஊடகங்களும், சில மனித உரிமை, சமூக ஆர்வலர்களும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் குறித்து மெளனம் சாதிக்கின்றனர்.
thoothu

No comments:

Post a Comment