இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதை செய்துள்ளது என்று அஹ்ரார் என்ற சிறை கைதிகள் தொடர்பாக ஆராயும் அமைப்பு- The Ahrar prisoner studies center- தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் வதைமுகாமான ஹாசரோன் -HaSharon prison- வதை முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நான்கு பெண் கைதிகளுக்கே சோதனை என்ற பெயரில் இந்த வதை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த வதை அறையில் 10 இஸ்ரேலிய பெண் சிப்பாய்களும் , 5 ஆண் சிப்பாய்களும், குறித்த வதை அறையின் அதிகாரியும் மற்றும் புலனாய்வு பிரிவினரும் இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுகாக அந்த பெண்களின் பெயரை வெளியிடமுடியாது என்று அஹ்ரார் அமைப்பு தெரிவித்துள்ளது விரிவாக
அந்த பெண் கைதிகள் கையடக்க தொலைபேசி வைத்திருப்பதாக கூறி சோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த பெண் கைதிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நிர்வாணப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமின் காவலர்கள் இந்த நான்கு பெண்களையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி சோதனையிட்டுள்ளனர். இதன் போது வதை முகாம் காவலர்கள் நீதிக்கும் , மனித ஒழுக்கத்துக்கும் முரணாக செயல்பட்டுள்ளனர் என்று அஹ்ரார் அமைப்பின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த சோதனை தொடரில் அவர்களின் வதை அறையில் இருந்து தொழுகை உடையுடன் மட்டும் வெளியேற்றபட்டு அவர்களின் வதை அறை சுமார் சுமார் 6 மணிநேரம் தொடர்ந்து சோதனையிடப்பட்டுள்ளது. அந்த பெண் கைதிகளின் உடமைகள் தூக்கி வீசப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் படையால் எந்தவொரு கையடக்க தொலைபேசியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
சோதனை இடம்பெற்ற ஆறு மணிநேரம் அந்த பெண் கைதிகள் நால்வரும் உண்ணவோ, குடிக்கவோ தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்று அஹ்ரார் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment