ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.
நீங்கள் எதை பெயரிட்டுச் சொன்னாலும் அது அவரிடம் இருந்தது. 44 வயதான ரெட்டி தனது வீட்டருகே 3 அடுக்கு பிரம்மாண்ட வளாகம் ஒன்றை தனது குழந்தைகள் விளையாட மட்டும் அமைத்திருந்தார். ரெட்டியின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதில்லை. மாறாக தங்கள் நண்பர்களை அழைத்து வந்து தமது வளாகத்தில் தான் விளையாடுவார்கள். ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.
ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 40 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை நன்கொடையாக கொடுத்ததோடு, அதே போல் மற்றொன்றை தனது பெல்லாரி வீட்டிலும் வைத்திருக்கிறார். அவர் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்தால் சந்தனத்தால் வேலைப்பாடு செய்த அச்சு ஒன்றில் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு அந்த வைர கிரீடம் சுழன்று நம்மீது ஒளிக்கதிர்களை வீசும். பெங்களூருவில் உள்ள நிரந்தர அறை ஒன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட டாஜ் நட்சத்திர விடுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் ரெட்டிக்கு பாரிஜாதா என்ற பெயரில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அதிகமான சொகுசுக் கார்கள் ரெட்டியின் வீட்டில். பென்ட்லே, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் என பல இதில் அடங்கும். விடுமுறைகளை உலகின் பல பகுதியிலுள்ள உல்லாச இடங்களில் பொழுதை கழிப்பவர் ரெட்டி.
சுரங்க தொழில் உச்சத்தை அடைந்து சில வருடங்களுக்கு முன் சுறுசுறுப்பானபோது, பெல்லாரிக்கும், பெங்களூருவிற்கும் சிற்றுண்டிக்கு, மதிய அல்லது இரவு உணவிற்கு ஹெலிகாப்டரில் பறப்பார் ரெட்டி.
ஆனால் சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக காரில்தான் அதிக அளவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 3 ஹெலிகாப்டர் வைத்திருந்த ரெட்டியிடம் தற்போது ஒன்றுதான் உள்ளது. 1990களின் இறுதியில் கோடிக்கணக்கில் கடனில் இருந்த ரெட்டி கடந்த 12 ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டபடி பார்த்தாலே அவரது மனைவி பெயரில் மட்டும் 150 கோடி சொத்து. இந்த கொழுத்தலுக்கு நன்றி சொல்ல வேண்டியது சுரங்கத் தொழிலுக்கு. பெல்லாரியில் அவர் வீட்டருகே உள்ள மலைகுன்றை விளக்குகளால் அலங்கரிக்க மட்டும் ஆன செலவு 30 லட்சம்.
அவரது அரசியல் கலந்தாய்விற்காக உள்ள அறையின் பெயர் குட்டீரா. அங்கு நுழைந்தால் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, மூத்த பா ஜ க தலைவர் எல் கே அத்வானி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரபபா ஆகியோரின் பிரும்மாண்ட உருவப்படங்கள் நம்மை வரவேற்கும்.
ரெட்டியின் வீடு ஒரு கோட்டையை போன்றது. ஒரு பார்வையாளர் உள்ளே செல்ல வேண்டுமெனில் 3 செக்போஸ்ட், ஸ்கேனர்கள், வெடிகுண்டு சோதனைகள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்ற அடுக்குகளை கடந்து தான் செல்ல வேண்டும்.
பணங்களின் சுரங்கம்
தங்கம், வெள்ளி, பண்ணை வீடுகள், கட்டிடங்கள், முன்னோர் சொத்துக்கள், என முன்னாள் அமைச்சரான ரெட்டியின் சொத்துக்கள் 153.49 கோடிகள்
மலை போல் நகைகள்
2.2 கோடி மதிப்புள்ள தங்க இருக்கை (சேர்)
2.58 கோடி மதிப்பில் தங்க சிலைகள்
13.15 லட்சம் மதிப்பில் தங்க பெல்ட்
20.87 லட்சம் மதிப்பில் தங்க சாப்பாட்டு தட்டு, ஸ்பூன், சிறு பாத்திரங்கள்
இவை தவிர வைர, வைடூரிய, கோமேதக கற்கள், கழுத்து நகைகள், ஆண்கள் அணியும் கங்கணங்கள், மோதிரங்கள், வளையல்கள் என ஒரு நகைக் குவியலே காணப்பட்டதாம்.
வருமானமும் முதலீடுகளும்-
கர்நாடக லோக்யுக்தா முன் அவர் சமா்ப்பித்த விபரங்களின்படி
பணம் ரொக்க கையிருப்பு
1.11 லட்சம்
கார் – லேன்சர்
ஆண்டுச் சம்பளம் – 31.5 கோடி
வியாபார வருவாய் – 18 கோடி
வட்டிகளின் மூலம் வருவாய் – 1.8 கோடி
காப்பீடு (இன்சூரன்ஸ்) – 18.91 கோடி
பரஸ்பர நிதி முதலீடு – 4.2 கோடி
பத்திரங்கள் – 14.4 கோடி
பங்கு முதலீடுகள் – 47.31 கோடி
மக்களுக்கு கடன் முன்பணம் – 8.6 கோடி
வியாபார நிறுவனங்களில் முதலீடு – 2.9 கோடி
வங்கி முதலீடுகள் – 14.51 கோடி
வங்கி சேமிப்பு கணக்குகள் – 60.79 லட்சங்கள்
அஞ்சலக முதலீடு – 24 லட்சங்கள்
பண்ணை வீட்டு சொத்துக்கள்-
பண்ணை வீடு 19.71 ஏக்கர்
4.4 கோடி மதிப்பில் 7800 சதுர அடி இடம்
ஆர் எம் வி விரிவாகத்தில் பெங்களூருவிலும், பெல்லாரியிலும் இரண்டு கட்டிடங்கள்
பெல்லாரியில் மூதாதையர் சொத்து 40 லட்சம்
பொறுப்புகள் – 16.82 கோடி
குடும்ப வருவாய்-
மனைவி அருணா ரெட்டியின் சொத்துக்களை கணக்கிட்டால் அது ரெட்டியின் கணக்கிற்கு மேல் செல்லும்
ஆண்டுச் சம்பளம் – 16.5 கோடி
வியாபார வருவாய் 22.69 கோடி
நகைகள், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம், முதலீடுகள் என கணக்கிட்டால் கோடிகளில் வரும்
இவை தவிர இவரது குழந்தைகள் பிராமணி மற்றும் கிரீத்தியின் வருடாந்திர வியாபார வருவாய் 3.7 கோடி
__________________________________________________________
நன்றி – டைம்ஸ் ஆப் இந்தியா, தமிழில் – சித்ரகுப்தன்
No comments:
Post a Comment