யோகா குரு ராம்தேவ் பெயரில் எந்த நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவரது உதவியாளரை இயக்குனராகக் கொண்டு 34 நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பாராளுமன்றத்தில் கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “யோகா குரு ராம்தேவ் பெயரில் நிறுவனங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணன் பெயரில் 34 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 23 நிறுவனங்கள் உத்தர்கண்டில் பதிவு செய்யப்பட்டவை. 5 நிறுவனங்கள் உபியிலும், நான்கு நிறுவனங்கள் டெல்லியிலும், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா ஒரு நிறுவனமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு ஆச்சார்ய பாலகிருஷ்ணன்தான் தலைவராகவும் உள்ளார். இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.265 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையை அந்த நிறுவனங்கள் எப்படி ஈட்டின என்பதுதான் புரியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாபா ராம்தேவுக்கு சொந்தமான ரூ 1100 கோடி வர்த்தக சாம்ராஜ்யத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment