islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் – பிரதமர் மன்மோகன் சிங்

                                         
நாட்டில் எதிர்பாராதவிதமாக நடக்கும் அசம்பாவிதங்களை தொடர்ந்து சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சனிக்கிழமை மதக்கலவரத்திற்கு எதிரான சட்டத்தின் மீது விவாதம் நடத்த இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக் கழக கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.


சிங் கூறியதாவது; சட்டம் தன் கடமையை செய்யும் போது விசாரணை மேற்கொள்ளும் துறைகள் சார்புடைய தன்மை கொள்வதிலும் குறிப்பிட்ட சிலரை குறிக்கோளாகக் கொள்வதையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகத்தினிரிடையே சுமூகமான உறவுகள் தொடர்வது பலரின் தியாகத்திலாகும். மேலும் இக்குழுவின் உறுப்பினர்கள் மக்கள் இந்த அளவுக்கு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும் இல்லையேல் பல சமூகத்தினிரிடையே பதட்டம் நிலவி இருக்கும் என்று கூறியுள்ளார்.

எனினும் இவ்விஷயத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் நாட்டில் எதிர்பாராதவிதமாக நடக்கும் அசம்பாவிதங்களை தொடர்ந்து சிறுபான்மையினர் தாங்கள் புலனாய்வுக் குழுக்களால் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறினார்.

அஜ்மீர் ஷரீப் மற்றும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் போன்ற குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்வா தீவிரவாதிகள் குற்றவாளிகள் என்று புலனாய்வுக் குழுக்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இக்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்ற சமயம் சிறுபான்மையினர் சமூகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர் என்பதைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் சட்டம் தன்னுடைய வேலையைச் செய்யும்போது ஒரு சாராரை மற்றும் குறிவைப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பத்திரிக்கைகளும் சமுதாயத்தின் அமைதியை குலைக்காத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மதக் கலவரத் தடுப்பு சட்டமானது சிறுபான்மையினரைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினால் கலவரம் நடத்துபவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காது இருந்த மாநில அரசுகள் மீதும் கலவரத்திற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசால் கொண்டு வரப்படும் மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment