islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியாவில் குறைந்து செல்லும் ஆயுட்கால எண்ணிக்கை : உலகச் சுகாதார மையம்

                                   
இருதய நோய், ரத்தம் தொடர்பான நோய்கள், புற்று நோய்,நீண்ட நாளைய மூச்சுக்குழல் பிரச்சனைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் 60க்கும் குறைவான வயதில் இறப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து உலகச் சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு விதமான பழக்க வழக்க காரணிகள் இது போன்ற உயிர்ழப்புகளை துரிதப்படுத்துவதாக அடையாளப்படுத்தியுள்ளது.

புகைப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கம், பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் போன்றை கீழ்-நடுத்தர வருவாய் நாடுகளில் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா கீழ்-நடுத்தர வருவாய் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நடுத்த்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்டுள்ள திடீர் வசதிகளால் அவர்களின் பழக்க வழக்கங்கள், அதேபோல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் மோசமான சுகாதாரச் சூழல் ஆகியவற்றால் இளம் வட்யது சாவுகள் அதிகரிப்பதாக உலகச் சுகாதார மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

60 வயதுக்கும் கீழே உயிரிழப்போர் எண்ணிக்கையில் ஆண்களில் 38% பெண்களில் 32.1% இந்தியாவிலேயே நிகழ்ந்து வருகிறது இதனால் ஆப்கானிஸ்தான் நீங்கலாக இந்தியா இளம் வயது சாவில் முன்னிலை பெற்றுள்ளது!

மொத்த மரணங்களில் மேற்கூறிய காரணிகளால் ஏற்படும் நோய்களில் பலியாவோர் எண்ணிக்கை 53% ஆக உள்ளது என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

பெருகிவரும் வருவாய், மன அழுத்தம், பனிச்சுமை காரணமாக ஏற்படும் இருதய நோய்கள் 24% என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. இதனால் வலிப்பு நோய் சாத்தியங்களும் மாரடைப்பு சாத்தியங்களும் அதிகரித்துள்ளது.
இருதய நோய்க்கு அடுத்தபடியாக இருப்பது மூச்சுக்குழல் தொடர்பான நோய்கள் இந்தியாவின் மொத்த சாவுகளில் 11% பங்களிப்பு செய்வதாக அறிக்கை தெரிவிக்கிறது.

சர்க்கரை நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் மொத்த மரண விகிதத்தில் 12% காரணமாகி வருகிறது.

மேற்கூறிய நோய்வகைகள் மட்டுமின்றி காசநோய், மற்றும் சில இனம்புரியாத மர்மக் காய்ச்சல், மகப்பேறு மரணங்கள் (தாகும், சேயும்) ஆகியவை அதிகரிப்பில் இந்தியா முதல் 10 நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
37% மரணங்கள் இதுபோன்ற கம்யூனிகபிள் நோய்களால் வருவதே, மேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளும் இவ்வகை ச்சாவிற்கு பங்களிப்பு செய்துள்ளது.

இந்தியாவை ஒப்பு நோக்குகையில் மாரடைப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் போன்ற நோய்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சீனா, பாகிஸ்தான், ஏன் வங்கதேசத்திலும் மிகக்குறைவே என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ரத்த அழுத்தம் ஒரு மரணமேற்படுத்தும் ரிஸ்க் காரணிகளில் ஒன்றாக உள்ளது. உலக மரண விகிதத்தில் ரத்த அழுத்தத்தின் விகிதம் 13%. அடுத்த படியாக புகைப்பழக்கம் 9%, சர்க்கரை நோய் - 6%, உடற்பயிற்சியின்மை - 6%, உடற்பருமன் - 5% என்ற விகிதங்களில் உள்ளதாக உலகச் சுகாதார மையம் சுட்டிக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment