சேலம் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த “உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு” கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர்கள் தற்கொலைக்கான காரணங்கள், தற்கொலை செய்துகொள்பவர்களின், மனநிலை, அவர்களின் பின்னானி குறித்து ஆய்வுகள் செய்து வெளிட்டனர்.
மருத்துவர்களின் ஆய்வுகளும், அதற்கான தீர்வுகளும் குறித்து விவாதித்தனர். காவல் துறை துணை ஆணையாளர் ரவீந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் இறுதியில் வாசிக்கப்பட்ட்ட அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
உலகத்தில், சாரசரியாக வருடத்துக்கு மூண்டு லட்சம் நபர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களில், ஒரு லட்சம் நபர்கள் மரணமடைகிறார்கள். 85% நபர்கள் மன அழுத்தாத்தினால்த்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
தற்கொலை செய்து கொள்வதில் 80% நபர்கள் 15-25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களாக உள்ளனர்.
இயந்திர மயமாகி விட்ட இந்த காலகட்டத்தில் மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்ற காரணங்களால் தான் அதிக இளைஞர்கள் தற்கொலை செய்கிறார்கள்.
குறிப்பாக தமிழகத்திலும் கடந்த இருபது வருடங்களில் தற்கொலையின் அளவு அதிகரித்து வருகிறது.
பள்ளி ஆசிரியர்களின் மிரட்டலுக்கு பயந்து கொண்டு தற்கொலை செய்யும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பள்ளி மாணவ, மாணவியரின் தற்கொலை விகிதம் தமிழகத்தில் நடக்கும் மொத்த தற்கொலையில் 10% என்ற அளவில் உள்ளது. இது நாட்டிலேயே அதிகமான அளவாகும்.
பள்ளியில் படிக்கும் போதே குழந்தைகளுக்கு, இசைப்பயிற்சி, ஓவியம, நாட்டியம், யோகாசனம், விளையாட்டு, கராத்தே போன்ற கலைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தற்கொலை என்னம் ஏற்படாது.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகவேண்டும், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி காலப்போக்கில் இருவருக்குமான விரிசலை ஏற்ப்படுத்தும் என்று இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment