islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பிரான்சில் சர்கோசியின் புகழை குறைக்க பின்லேடன் சதித்திட்டம்

                                           
பிரான்சின் தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.


இந்தத் தேர்தலில் சர்கோசியின் புகழை குறைத்து அவரை தோல்வி அடைய செய்ய வேண்டும் என கடந்த மே மாதம் கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடன் திட்டமிட்டார்.

சர்கோசிக்கு பொது மக்களிடம் உள்ள புகழை குறைக்க வேண்டும் என பிடித்து வைத்துள்ள 4 பிரான்ஸ் நபர்களை கொல்ல பின்லேடன் திட்டமிட்டு இருந்தார். இந்த அதிர்ச்சி தகவலை பிரான்ஸ் இன்போ ரேடியோ தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு உள்ளது.

அல்கொய்தாவின் வடக்கு ஆப்ரிக்க உறுப்பினர்களான ஏகியூ, ஐஎம்யூ அமைப்பினர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிணைய நபர்களாக 4 பிரான்ஸ் மக்களை பிடித்து வைத்துள்ளது. தீவிரவாதிகள் 9 கோடி யூரோவை பிணையத் தொகையாக கேட்டனர்.

இது அமெரிக்க டாலரில் 12 கோடியே 30 லட்சம் ஆகும். பிரான்சில் முஸ்லிம் மக்களை சர்கோசி அரசு அவமானப்படுத்துகிறது. இதனால் பிரான்ஸ் நபர்களை தற்போது தங்கள் பிடியில் வைத்து இருப்பது நியாயமானது என்று அல்கொய்தா தீவிரவாதிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment