islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியாவின் திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு

                                          
தென் சீனக் கடலில் வியட்நாம் அருகே இயற்கை எரிவாயுவை தோண்டியெடுக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சீன அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


தனது கடலோரப் பகுதியில் தனது கடல் எல்லைக்குள் 2 இடங்களில் எரிவாயுவை தோண்டியெடுக்க இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சிக்கு வியட்நாம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கான பணிகளை ஓ.என்.ஜி.சியின் வெளிநாட்டுப் பிரிவான ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிகம் அமைப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறையிடமிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ள கடிதத்தில் எங்களிடம் அனுமதி பெறாமல் தென் சீனக் கடலில் ஓ.என்.ஜி.சி எரிவாயுவை தோண்டுவது சட்ட விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்துக்கு சீன தூதரகம் மூலமாக இந்திய வெளியுறவுத்துறை சீன அரசுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில் நாங்கள் எரிவாயுவைத் தோண்டுவது வியட்நாமின் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதியுடன் தான். இதற்கு உங்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இதில் எந்த சட்ட விதியும் மீறப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 16ம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியட்நாம் செல்ல உள்ள நிலையை இந்தப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

தென் சீனக் கடலின் 127, 128வது பிளாக்குகளில் தான் ஓ.என்.ஜி.சி எரிவாயுவை தோண்டியெடுக்க உள்ளது. ஐ.நா சபையின் கடல் எல்லை ஒப்பந்தப்படி இந்தப் பகுதி வியட்நாமைத் தான் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிழக்கு ஆசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பதும், வியட்நாமின் பாராசல் தீவை 1974ம் ஆண்டில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஸ்பார்ட்லி தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுடன் வியட்நாம் மோதி வருவதும் முக்கியமான விஷயமாகும்.

2007ம் ஆண்டு ஸ்பார்ட்லி தீவு அருகே இங்கிலாந்தின் BP நிறுவனம் எரிவாயு தோண்டியெடுக்க இருந்த நிலையில் சீனாவின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment