islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒரு செய்தி - பல கண்ணோட்டங்கள் : இதுதான் ஊடகம்



ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம்-சட்டமன்றம், நீதித்துறை, அதிகாரம் ஆகிய அனைத்தும் அரசின் கீழ் இருக்கும் நிலையில், நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகம் முந்தைய தூண்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஜனநாயகம் நேர்மையாகச் செயல்பட உதவுகிறது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் ஊடகங்கள் இப்படிச் செயல்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற முடியும்.


ஒரு செய்தியை ஊடகங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வெளியிட முடியும் என்பதற்குக் கீழே ஓர் உதாரணத்தைத் தந்துள்ளேன். நடுநிலை என்பதெல்லாம் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் தந்திர வார்த்தைகளே என்பது உங்களுக்குப் புலனாகும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் தொடர்பான ஒரு செய்தி இருவேறு செய்தித்தாள்களில் பின்வருமாறு வெளியாகி உள்ளது.
"பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளைப் பார்வையிட்டு கணக்கெடுக்கச் சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும் கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.
அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்
கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் :
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இப்படி ஒரு செய்தித்தாளில் வெளியாகி இருந்தது. மற்றொரு பத்திரிகையிலோ...
"திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலவரையிலிருந்து குவியும் பொக்கிஷங்களின் மதிப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாடு அடைந்ததாக கணிக்கப்படும் நஷ்டத்திற்கு இணையான தொகையாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த இணைய இதழுக்கான கட்டுரை எழுதப்படும் சமயத்திலேயே அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி வளர்ந்து கொண்டிருந்தது. வைரங்கள், தங்க நகைகள், தங்க நாணயங்களின் மேலோட்டமான இந்த மதிப்பைவிட அவற்றின் நிஜமான மதிப்பு இரு மடங்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
அந்தக் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் கோவிலின் சொத்து என்பதால் அதை எதன் பொருட்டும் கைவைக்கக்கூடாது; அவை கடவுள் பத்மநாப சுவாமிக்குச் சொந்தமானவை என்று பக்திமிகுதியில் சொல்பவர்களின் குரலில் தெரியும் உறுதியைப் பார்க்கும் போது இது ஒரு பிரச்சனைக்குரிய தலைப்பு என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. திருப்பதி ஏழுமலையானைவிட திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி பணக்காரராகிவிட்டார் என்று எழுதும் பத்திரிகைகள் இத்தகைய மேலோட்டமான பார்வைக்கும் கடும் சர்ச்சைகளுக்கும் தூபம் போடுகின்றன."

என்று வெளியாகியிருந்தது.

இதுதான் பத்திரிக்கைகள். செய்திகளைத் தம்விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் திரித்தோ, மறைத்தோ வெளியிடும் இப்பத்திரிக்கைகளையும் மக்கள் கண்காணிக்கவேண்டியது அவசியம்.

- வாசகர் சிங்கைச் செல்வன்.

No comments:

Post a Comment