islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மத்தியப் பிரதேச பள்ளிகளில் நடப்பாண்டு முதல் பகவத் கீதை பாடம்



மத்தியப் பிரதேசத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிக் கூடங்களில், பகவத் கீதை பாடமாக நடத்தப்பட உள்ளது.

பாண்டவர்களுக்கும், கெüரவர்களுக்கும் குருஷேத்திரத்தில் நடந்த மகாபாரத போரின் போது, பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசித்த வாழ்க்கை நெறிமுறைகள்தான் பகவத்கீதையாகும். ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் இது உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இதை போதிக்க முதல்வ் சிவராஜ் சிங் செüகான் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவெடுத்தது. இது நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இந்நிலையில், இதற்கான பாடங்கள் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு அது பாடமாக நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிபோதனை, விளையாட்டு போன்று பகவத் கீதையும் ஒரு பாடமாக இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை பகவத் கீதை பாடம் அரசுப் பள்ளிக் கூடங்களில் போதிக்கப்பட உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஹிந்துக்கள் அல்லாததோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதும், பகவத் கீதையை பாடமாக போதிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

No comments:

Post a Comment