20 பேர் கொல்லப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் போலீஸ் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.
புனேயிலிருந்து மாத்யமம் பத்திரிகைக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில் அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தா ஆகிய அமைப்புகளின் பங்கு வெட்ட வெளிச்சமான பிறகும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து விசாரணை நகர்கிறது.
குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் மர்மமான முறையில் விசாரணையை நடத்திவருகிறது. அவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஊடகங்கள் செய்திகளை உருவாக்குகின்றன. முக்கிய பத்திரிகைகள் எல்லாம் கடுமையான கட்டுப்பாட்டில் உள்ளன. போலீஸ் வட்டாரங்களின் பெயரால் யாருடைய விருப்பத்தையோ அவை பூர்த்தி செய்கின்றன.
மலேகான், கோவா, தானே, கல்யாண், அஜ்மீர், சம்ஜோதா குண்டு வெடிப்புகளில் சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளின் பங்கு வெளியானது. இவ்வழக்குகளில் தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளின் முறையும் மும்பை குண்டு வெடிப்பும் ஒரே போலவே உள்ளன.
ஆனால் ஏன் ஸ்ரீகாந்த் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர், தயானந்த் பாண்டே ஆகியோரை விசாரிக்க ஏ.டி.எஸ் முயலவில்லை?-முஷ்ரிஃப் கேள்வி எழுப்புகிறார்.
ஒவ்வொரு குண்டுவெடிப்பிற்கு பிறகு உளவுத்துறையின் தோல்வி எனக்குற்றம் சாட்டப்படுவது குறித்து முஷ்ரிஃபிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் அளித்த பதில், ’அவ்வாறு ஒன்றே கிடையாது. ரகசிய தகவல்களை அளிப்பவர்களே இத்தகைய செயல்களில் (குண்டு வெடிப்புகளில்) ஈடுபடும் பொழுது எவ்வாறு முன்னெச்சரிக்கை விடுப்பார்கள்? இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில் புலனாய்வு ஏஜன்சிகளுக்கு பங்கிருப்பதாக நான் நம்புகிறேன்.
இதனை நான் எழுதிய ‘கர்காரேயை கொன்றது யார்? (ஹு கில்ட் கர்கரே?) என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். குண்டு வெடிப்புகளை நிகழ்த்துபவர்களே வழக்கை விசாரணைச் செய்தால் நாட்டிற்கு எவ்வாறு நீதி கிடைக்கும்?-முஷ்ரிஃப் கேள்வி எழுப்பினார்.
2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவரும் நேர்மையான அதிகாரியுமான ஹேமந்த் கர்காரேயின் மரணத்தை குறித்து எஸ்.எம்.முஷ்ரிஃப் ‘ஹு கில்ட் கர்கரே’ என்ற நூலை எழுதியுள்ளார்.இந்நூல் ‘கர்கரேயை கொன்றது யார்?’ என்ற தலைப்பில் இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment