islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மும்பை:ஏ.டி.எஸ்ஸின் சித்திரவதையில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் மரணம்


மும்பை தொடர் குண்டுவெடிப்பின் பழியைபோட முஸ்லிம் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய புலனாய்வு ஏஜன்சிகளும், ஊடகங்களும் முஸ்லிம்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினரின் மிருகத்தனமான சித்திரவதையில் ஓர் அப்பாவி முஸ்லிம் வாலிபர் தனது உயிரை இழந்துள்ளார்.



மும்பை தொடர்புகுண்டுவெடிப்பு தொடர்பாக அஹ்மதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என கூறி புலனாய்வு ஏஜன்சிகள் சந்தேகிக்கும் அஃப்ஸல் உஸ்மானியின் சகோதரர் ஃபயாஸ் உஸ்மானி என்பவர்தாம் மருத்துவமனையில் வைத்து தனது உயிரை இழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஃபயாஸை விசாரணைக்காக ஏ.டி.எஸ் பிடித்துச்சென்றுள்ளது. ஆனால் ஏ.டி.எஸ்ஸின் மனிதாபிமானமற்ற விசாரணையின் போது ஃபயாஸ் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக இவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிட்சை பலனின்றி மரணித்தார்.ஃபயாஸின் குடும்பத்தினர் அவர் போலீஸ் சித்திரவதையில்தான் இறந்தார் என குற்றம் சாட்டுகின்றனர்.
அப்பட்டமான இந்த படுகொலையை மறைக்க போலீஸ் பொய்களை கூறிவருகிறது. அவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாகவும் 3 நாட்கள் அவர் மருந்து சாப்பிடாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் டாக்டர்களை மேற்கோள்காட்டி கூறுகின்றனர். அதிகாரம் கையிலிருப்பதால் எதனையும் செய்யலாம் என திமிர் பிடித்து அலையும் புலனாய்வு ஏஜன்சிகள் எப்பொழுது பாடம் பெற போகின்றனவோ?

இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்புகள் நடந்தாலும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டுவைத்து குண்டுவெடிப்புகளையும்,இனப்படுகொலைகளையும் நடத்திவரும் சங்க்பரிவார பாசிச அமைப்புகளின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் அப்பாவி முஸ்லிம்களை இல்லாத அமைப்புகளின் பெயரால் கைதுச் செய்து சித்திரவதை செய்வது இந்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு கைவந்த கலையாகும்.

இதே வேலையை தற்பொழுது மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையிலும் கடைப்பிடித்துவருகின்றனர் இந்திய புலனாய்வு அதிகாரிகள். சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரால் அப்பாவிகளை வேட்டையாடியதன் விளைவு ஓர் நிரபராதியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசும், புலனாய்வு ஏஜன்சிகளும் என்ன பதிலை சொல்லப்போகின்றன?


No comments:

Post a Comment