islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஹிஜாபை பேணுவதில் அலட்சியம்


 
 
 
 
ஹிஜாப் அணிவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் பெண்களின் உடலை மறைப்பதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதையும் பலர் எழுத்து வடிவிலும் உரை மூலமாகவும் நல்உபதேசம் செய்தும் பல இஸ்லாமிய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் திருந்துவதாக தெரியவில்லை.இந்த கட்டுரையின் பின்னணி மூன்று முக்கிய நோக்கங்களாகும்.

1)அல்லாஹ்வுக்கு பயந்து ஹிஜாப் சட்டத்தை பேணாமல் உலகுக்காக ஹிஜாப் அணிதல்.
 
2)உறவினர்களிடம் ஹிஜாப் சட்டத்தை பேணுவதில்லை.
 
3)ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களிடம் அறிவுரை செய்தல்.

1)அல்லாஹ்வுக்கு பயந்து ஹிஜாப் சட்டத்தை பேணாமல் உலகுக்காக ஹிஜாப் அணிதல்.

தங்களுடைய சொந்த கிராமத்தில் இருக்கும்போது தங்களுடைய உடலை முழுமையாக மறைத்து அடங்கி இருக்கும் பெண்கள் நகரதிர்க்கோ அல்லது வேறு நாட்டிற்கோ செல்லும்போது ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்கலாக இருப்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஹிஜாப் சட்டத்தை பேணியவர்கள் மற்ற நாடுகளுக்கு போகும்போது அந்த நாட்டு கலாசாரத்தில் மூழ்கி இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப் சட்டத்தை மதிக்காததையும் பார்க்கிறோம்.வீட்டில் பெற்றோர்கள் முன் இருக்கும்வரை ஹிஜாப் சட்டத்தை பேணும் பெண்கள் வெளியே கல்லூரிக்கோ அல்லது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது ஹிஜாபை தூக்கி எறிந்துவிடும் இளம் தலைமுறையினரையும் நாம் பார்க்காமல் இல்லை.சில பெண்கள் ஹிஜாப் என்ற பெயரில் தங்களின் உடலை முழுமையாக மறைக்காத ஆடைகளையும் அணிகிறார்கள்.இந்த சிலரின் நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்?ஊருக்கும் உலகுக்கும் பயந்து தான் இவர்கள் தங்கள் ஹிஜாப் சட்டத்தை பெனுகிறார்களே தவிர இறையச்சம் என்பது சிறிதும் மனதில் இல்லை.


நாம் மேல் குறிப்பிட்டவைகல கற்பனை அல்ல.சர்வ சாதாரணமாக சில இஸ்லாமிய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்களால் அரங்கேறும் காரியங்களாகும்.சொந்த கிராமங்களில் தன் உடலை இஸ்லாம் கூறிய முறையில் பேணியவர்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு சென்றதும் பேனாதது ஏன்?ஏனெனில் ஹிஜாப் அணியாவிட்டால் ஊர் நம்மை பழிக்குமே என்றுதான் இவர்கள் அணிந்தார்களே தவிர அல்லாஹ் கூறினான் என்பதற்காக அல்ல.சிலரை அவர்களுடைய பெயரை வைத்துதான் முஸ்லிம் என்று இனம் கண்டு கொள்ள முடிகிறது.நிச்சயமாக இது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மானக்கேடு என்பதில் சந்தேகமில்லை.

"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குர்ஆன் 33:59)"

இஸ்லாத்தை ஒழுங்காக போதிக்காமல் இறையச்சத்தை ஊட்டாமல் பெண்கள் எப்படி நடக்கவேண்டும்,பெண்களுக்கு ஹிஜாப் சட்டம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை கூறி வளர்க்காத காரணத்தினால்தான் இந்த நிலைக்கு இன்று முஸ்லிம் சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.அனாச்சாரங்கள் பித்அத்களை புகுத்தி சமுதாயத்தை படுகுழியில் தள்ளுவதற்கு தான் ஊர் ஜமாத்திற்கு நேரம் இருந்ததே தவிர அல்லாஹ்வை நம்புதை பற்றியோ ,அல்லாஹ் கூறிய சட்டங்களை பின்பற்றுவது பற்றியோ கவலைப் பட்டதாக தெரியவில்லை.சில பெண்கள் இஸ்லாம் ஹிஜாப் சட்டத்தை வலியுருத்துகிறது என்று தெரிந்தும் பண ஆசைக்காகவும் புகழ் ஆசைக்காகவும் இதை அலட்சியப் படுத்துகிறார்கள்.இவர்கள் உலகிலேயே தங்கள் தவறை உணர்ந்து திருந்திவிட்டால் அல்ஹம்துலில்லாஹ் அல்லது இவர்கள் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் உண்மையை உணர்ந்துக் கொள்வார்கள்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!(அல் குர்ஆன் 2:223)

2)உறவினர்களிடம் ஹிஜாப் சட்டத்தை பேணுவதில்லை.

சில பெண்கள் வெளியே செல்லும்போதும் அந்நிய ஆண்கள் முன் இருக்கும்போதும் இஸ்லாம் கட்டளை இடுகின்ற ஹிஜாப் சட்டத்தை பெநியவர்கலாக இருக்கின்றனர்.ஆனால் தங்கள் உறவினர்களிடம் இருக்கும்போது சகஜமான உடையில் நடமாடுவதை பார்க்கிறோம்.இதற்க்கு காரணம் அனைத்து ஆண் உறவினர்களும் நமக்கு அந்நிய ஆணாக ஆக மாட்டார் என்று தவறாக எண்ணுவது தான்.அல்லாஹ்வும் நபிகள் நாயகமும் எவரை திருமணம் செய்ய தடை செய்யப் பட்டிருக்கிறதோ அவர்களை தவிர மற்றவர்கள் முன் இஸ்லாம் கூறும் முறையில் உடலை மறைத்து தான் இருக்க வேண்டும்.

"இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முக்காடுகளை கொண்டு அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல் குர்ஆன் 24:31)"

மேலும் பெரியம்மா மகன் சின்னம்மா பிள்ளைகள் பெரிய வாப்பா மகன் அல்லது சிறிய வாப்பா மகன் எனவும் இவர்கள் சகோதர்கள் சகோதரிகள் தானே இவர்கள் முன்னாடி ஹிஜாப் எப்படி பேணுவது எனவும் மேலும் கணவருக்கு தம்பிமுரையில் உள்ளவர்கள் எனக்கும் தம்பிமாதிரி நான் அப்படி நினைக்கவே இல்லை என எத்தனையோ பெண்கள் வியாக்கியானம் சொல்கிறார்கள் அல்லாஹ் யார் யார் முன் ஹிஜாபை பேனசொல்கிரானோ அவர்கள் முன் பேணுவது நம் கடமை இதை தான் நாம் செய்ய வேண்டுமே தவிர இதை சொல்பவர்களை குறை கூறி புறம் சொல்வது நம்வேலை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ் கூறியவர்களை தவிர வேறு யாரிடமும் ஹிஜாப் உடை இல்லாமல் தோற்றம் அளிக்காதீர்கள்.அல்லாஹ் கூறியதில் அலட்சியமாக இருந்தால் கேடுகளே உண்டாகும்.

நபி( ஸல்) அவர்கள் "பெண்கள் இருக்கும் இடத்திற்க்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன் "என்று கூறினார்கள்.அப்போது அன்சாரிகளில் ஒருவர்."அல்லாஹ்வின் தூதரே கணவருடைய உறவினர்களைப் பற்றி என்ன சொல்கிறிர்கள்?"என்று கேட்டார்.நபி (ஸல்)அவர்கள் ."கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்"என்று கூறினார்கள்
அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி),நூல்:புகாரி 5232 

3)ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களிடம் அறிவுரை செய்தல்.

நம்முடைய கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே ஹிஜாப் சட்டத்தை பேணுபவர்களிடேயும் அறிந்தவர்களிடயேயும் தான் சுற்றி சுற்றி வருகிறது.இந்த சட்டங்களை பேனாதவர்களிடம் எடுத்து செல்லுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.நகரப் புறங்களில் வாழும்போது வீடுகள் நெருங்கி இருக்கும்.ஒரு வீட்டில் இருப்பவர் பக்கத்துக்கு வீட்டில் நடப்பவற்றை தெளிவாக பாக்கக் கூடியதாக இருக்கிறது.இதை கவனிக்காமல் சில முஸ்லிம் பெண்கள் சாதாரணமான உடையில் வளம் வருகின்றனர்.இஸ்லாம் எந்த அளவிற்கு ஹிஜாப் சட்டத்தை வலியுறுத்துகிறது என்பதை அவர்களிடம் விளக்க நாம் அனைவரும் கடமைப் பட்டு இருக்கிறோம்.உங்கள் வீட்டில் உங்களுடைய மனைவி ,தாய் ,சகோதரி போன்றவர்கள் ஹிஜாப் சட்டத்தை நன்கு பேணக் கூடியவர்களாக இருக்கிறார்களா என்பதையும் கவனித்துக் கொள்ளவும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டு மென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
(நூல் : புஹாரி 3461,இதை அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்).

ஆசிரியர் : முஹம்மது ரஃபீக்
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment