islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
உலகின் நீளமான கடல் பாலம் திறப்பு!
உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் வியாழக் கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.
சீனாவின் கிழக்குத் துறைமுக நகரான கிங்டாவோவையும் ஹாங்டாவ் தீமையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூரம் 26.4 மைல்களாகும்.
சுமார் 7,500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அகலம் 110 படி அடிகள். 5000 தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் கடந்த திங்கள் கிழமையன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வியாழக் கிழமையன்று பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டது.
2006ஆம் ஆண்டு முதல் இரு வேறு குழுக்களாகப் பணியார்கள் வேலை செய்து வந்தனர். கடந்த டிசம்பர் 22 இதன் இணைப்புப் பணிகள் முடிவுற்றன.
உலகின் நீண்ட கடல் பாலமாகப் புகழ் பெற்றுள் க்குய்ங்டாவ் ஹாவாயன் பாலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கே இந்தப் புகழைப் பெற்றிருக்கும். இதன் நீளத்தைவிட அதிக நீளம் உடைய மற்றொரு பாலத்தை அமைக்கும் பணியையும் சீனாவே மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தையும் ஹாங்காங் மற்றும் மகாவ் ஆகியவற்றையும் இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்கும் பணியை கடந்த டிசம்பர் மாதம் சீனா தொடங்கியுள்ளது. 30 மைல்கள் தொலைவுள்ள இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2016ஆம் ஆண்டு நிறைவுறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment