islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இரவு பார்டியில் ரைட்:போதைப்பொருள் தடுப்பு அதிகாரி உள்பட 5 பேர் கைது



வேலியே பயிரை மேய்ந்த சம்பவங்கள் இந்தியாவை பொறுத்தவரை புதிய செய்தி அல்ல. போதைப்பொருள் தடுப்பு தினத்தில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட இரவு பார்டி ஒன்றில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆன்டி நார்கோடிக் ஸெல்(போதை மருந்து தடுப்பு பிரிவு) இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்துபேர் கைதுச் செய்யப்பட்டனர்.

இரவு பார்டியில் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மும்பை ஆன்டி நார்கோடிக் ஸெல் இன்ஸ்பெக்டர் அனில் ஜாதவ், உதவியாளர்களான சுனில் குலே, இரவு பார்டியை நடத்திய ஸ்னேஹ்ஜித் ஸஜல்கர், குஷன்குமார் ஸஜன்குமார், ஹோட்டல் மானேஜர் ராகுல்கன்னா ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர்.

சோதனை நடக்கும் வேளையில் 59 இளம்பெண்கள் உள்பட 290 பேர் பார்டியில் பங்கேற்றிருந்தனர்.இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு விடுவித்தனர். அறிக்கை வந்தபிறகு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துணை சூப்பிரண்ட் எஸ்.பி நமரத பாட்டீல் தெரிவித்தார்.பார்டி நடந்த ஹோட்டலில் இருந்து கஞ்சா, கொக்கைன், சரஸ் உள்ளிட்ட 3.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.அனில் ஜாதவை சஸ்பெண்ட் செய்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment