islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
ராம்தேவின் வெளிநாட்டு சொத்து:அமலாக்கப்பிரிவு விசாரணை துவங்கியது
ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவின் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை குறித்த விசாரணையை அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் துவக்கியுள்ளது.
வெளிநாட்டு சட்டங்களை மீறியா ராம்தேவ் வெளிநாடுகளில் முதலீடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்? என்பதுக் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் விசாரணை நடத்தும். ஸ்காட்லாந்தில் ராம்தேவிற்கு சொந்தமான தீவும் இவ்விசாரணையில் உட்படும்.
எச்சரிக்கையுடன் நடக்கும் இவ்விசாரணை போதுமான ஆவணங்கள் மற்றும் ரகசிய புலனாய்வு விபரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது. ஏற்கனவே ராம்தேவின் முக்கிய உதவியாளர் பாலகிருஷ்ண போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றார் என்ற குற்றச்சாட்டைக்குறித்து சி.பி.ஐ முதல் கட்ட விசாரணையை துவக்கியுள்ளது.
இதற்கிடையே, அரசுக்கு எதிராக ஹைடெக் யோகாகுருவின் புதிய விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இது அவருடைய மற்றொரு யோகா பயிற்சி மட்டுமே என தெரிவித்தார். இவ்விஷயத்தில் இன்னொரு விளக்கம் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு போலீஸ் நடவடிக்கையின் மூலம் டெல்லியிலிருந்து வெளியேற்றப்பட்ட ராம்தேவ், தனது ஆதரவாளர்களை சந்திக்க டெல்லிக்கு வருகைத்தந்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய அரசை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் அவர். வெளிநாட்டில் இந்தியாவில் இருந்து இரண்டு லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராம்தேவ் குற்றச்சாட்டைக்குறித்து பதிலளித்த வீரப்ப மொய்லி, அவருக்கு இந்த கணக்கு விபரம் எங்கிருந்து கிடைத்தது என்பதை தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயார் என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment