islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
அமர்நாத் யாத்திரை தொடங்கியது
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் புனிதப் பயணம் இன்று 28-06-2011 தொடங்கியது.
ஜம்முவில் உள்ள பகவதி நகரில் இருந்து 2096 பக்தர்கள் அடங்கிய முதல் குழு இன்று புறப்பட்டுச் சென்றது. அவர்களின் பயணத்தை காஷ்மீர் சுற்றுலாத்துறை அமைச்சர் நவாங் ரிக்ஸின் ஜோரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 2096 பக்தர்களும் மொத்தம் 73 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இதுவரை மொத்தம் 2,50,000 பேர் பதிவு செய்துள்ளனர் என்று அமர்நாத் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் பக்தர்கள் உடனடியாக பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமைதி நிலவுவதால், அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இதுவரை இல்லாத அளவு மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என்று காஷ்மீர் மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment