islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

வருண் காந்தியின் மத வெறியை தூண்டும் பேச்சு:சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு


2009-ஆம் ஆண்டு நடந்த மக்களை தேர்தல் பிரச்சார வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய பா.ஜ.க எம்.பி வருண் காந்தி மீது பிலிபித் நீதிமன்றம் குற்றத்தை பதிவு செய்தது.

வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் ஜூலை 6-ஆம் தேதி சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. மத வெறியை தூண்டுதல், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக குற்றம் சாட்டுதல் உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷனின் உத்தரவின் படி கடந்த 2009 மார்ச் மாதம் 17-ஆம் தேதி வருண் காந்தியின் மீது வழக்கு தொடரப்பட்டது. மார்ச் 28-ஆம் தேதி இவர் சரணடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

No comments:

Post a Comment