islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நாயின் விலை ரூ.6,91,21,690


கோடிக்கணக்கான மக்கள் கையில் காசில்லாமல் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இல்லையென்றால் ஒரு நாயை 6 கோடியே 91 லட்சத்து, 21 ஆயிரத்து, 690 ரூபாய் கொடுத்து வாங்குவாரா ஒருவர்?

சீனாவின் வடபகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க அதிபர் ஒருவர்தான் அவ்வளவு விலை கொடுத்து அந்த நாயை வாங்கியிருக்கிறாராம். ஆடம்பரமான கார்கள், விலையுயர்ந்த நகைகள், ரத்தினம் பதித்த பேனாக்கள் என்று வாங்கி அலுத்த மேட்டுக்குடியினர் வேறு எதை வாங்குவது என்று திக்குத் தெரியாமல், இப்போது திபெத்திய மஸ்டிஃப் ரெட் வகை நாயை வாங்குகிறார்கள்.

இதற்கு முன்பு இந்த நாயை சீனாவில் லூ லியாங் என்பவர் வைத்திருந்தார். ஒரு நாளைக்கு 130 கிலோ எடையுள்ள சிக்கன், மாட்டுக்கறி போன்ற அசைவ உணவுகளை இந்த நாய் வெளுத்துக் கட்டியதாம்.

ஓர் அலுவலகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரியின் சம்பளத்தைவிட பல மடங்கு இந்த நாய்க்குச் செலவாகிறது என்று அவர் இதை நைஸôக விற்றுவிட்டாராம்.

இந்த மஸ்டிஃப் ரெட் வகை நாய் ரொம்பவும் புத்திசாலி. சென்சிட்டிவ். ஆபத்து வரும் என்பதை முன்னரே உணர்ந்து எச்சரிக்கை "குரை' வேறு குரைத்து வைக்குமாம்.
-DINAMANI

No comments:

Post a Comment