islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உலகின் அனைத்து சர்வாதிகாரி​களையும் அமெரிக்கா ஆதரிக்கிறது​-அஹ்மத் நஜாத்


உலகில் எங்கேயெல்லாம் சர்வாதிகாரிகள் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.


ஈரானின் தெற்கு நகரமான அபதானில் எரிவாயு தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்து அவர் உரை நிகழ்த்தினார். அமெரிக்காவின் ஆட்சி முறையை விமர்சித்த நஜாத்,”ஒன்று அல்லது இரண்டு சர்வாதிகாரிகள் ஒரு நாட்டை 30, 40 ஆண்டுகள் ஆட்சி புரிவதற்கும், ஒரு நாட்டை இரண்டு கட்சிகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சிபுரிவதற்கு என்ன வித்தியாசமுள்ளது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறியதாவது:அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஏற்படவில்லை எனில் சுதந்திரத்தை விரும்பும் எந்த அமைப்புகளும் அங்கு அதிகாரத்தை பெற இயலாது. அமெரிக்கா தனது சொந்த ஆதாயத்திற்காக இஸ்ரேலை பாதுகாக்கிறது.

அதன் சதித்திட்டங்கள் குறித்து பிராந்தியத்தில் உள்ள நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அவர்களுடைய திட்டங்கள் எல்லாம் ஷியோனிச ஆட்சியையும், உலக மேலாதிக்கத்தையும், அமெரிக்காவின் விருப்பங்களையும் பாதுகாப்பதே. பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் முக்கிய எதிரிகள் அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகள் மற்றும் சியோனிஷ ஆட்சியுமாகும்.

அனைத்து பிராந்திய நாடுகளும் இதுக்குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். பிராந்தியத்தில் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டையும் பிளவு படுத்துவதுதான் அமெரிக்காவின் திட்டமாகும். வாஷிங்டன் பிற நாடுகளை தனது நோக்கத்தை அடைவதற்காக பயன்படுத்தும் தனது நோக்கத்தை அடைந்த உடன் அந்நாட்டை தூக்கி வீசிவிடும்.

அமெரிக்காவின் பிரிவினையை உருவாக்கும் சதித்திட்டங்கள் குறித்து பிராந்திய நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்காவின் போர் வெறி கொள்கையை விமர்சித்த அஹ்மத் நஜாத் பிராந்தியத்தில் சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் அமெரிக்கா தான் பொறுப்பாகும் என்றார்

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்காலத்தில் நீதியின் முன்னால் நிறுத்தப்படுவார்கள்.அமெரிக்காவின் ஆதிக்கம் இல்லாத இஸ்ரேலின் ஆட்சி இல்லாத ஒரு புதிய மத்திய கிழக்கும், வட ஆப்பிரிக்காவும் உருவாகும்.காலனியாதிக்க உலகம் விரைவில் வீழ்ச்சி அடையும்.வெகு விரைவில் முதலாளித்துவம் சீர்குலைவை சந்திக்கும்.அழுத்தமாக கூறுகிறார் அஹ்மத் நஜாத்.

No comments:

Post a Comment