islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

வன்முறை எதிர்ப்பு மசோதா குறித்து பிஜேபி மீது காங்கிரஸ் குற்றசாட்டு


காங்கிரஸ் கடந்த வெள்ளியன்று மதச்சாயம் பூசப்படும் வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்படும் மசோதாவை பிஜேபி தவறான கண்ணோட்டதிருக்கு கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மதவாத செயல் புரியும் கட்சி இதுபோன்ற மசோதாவைப் பற்றி கவலை கொள்வது இயற்கையானது எனவும் தெரிவித்துள்ளது.

இம்மசோதா குறித்து காங்கிரெசின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி கூறியதாவது இன்னும் மசோதாவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் பலவேறு சாராரிடம் அறிவுரைகள் கேட்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பிஜேபி தன்னுடைய மதவாத கொள்கையால் முன்கூட்டியே இம்மசோதாவின் வரையறை ஆய்வில் இருக்கும் போதே எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிஜேபி யின் இந்த செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

பிஜேபி தலைவர் அருண் ஜெட்லி கடந்த வியாழன் அன்று மதம் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறை தடுப்பு மசோதா குறித்து கூறும் போது இது மாநில அரசுகளின் சட்டத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் மத நல்லிணக்கத்தில் பிளவு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பிஜேபி-யின் கூற்றுக்கு பதிலளித்துள்ள சிங்வி பிறப்பிலிருந்து எந்த கட்சி மத கொள்கைகளை பற்றி பிடித்துக் கொண்டுள்ளது என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் எனவும் மேலும் எந்த கட்சி குஜராத் கலவரம், கர்நாடக ஊழல் மற்றும் பாப்ரி மஸ்ஜித் பிரச்னை ஆகியவைகளை அவமான சின்னங்களாக கொண்ட RSS இன் கருவறையில் இன்னும் இருப்பது யாரென்று நாடறிந்த ஒன்று எனவும் கூறியுள்ளார். எனவே பிஜேபி-யின் கவலை இயற்கையானதே எனவும் தெரிவித்துள்ளார்.

இம்மசோதாவை பற்றி பிஜேபி-யின் பொய்பிரச்சாரம் குறித்து குற்றம் சாட்டிய சிங்வி மசோதாவின் 60 பிரிவுகளில் ஒரு பிரிவு மட்டுமே மத கலவரங்கள் தொடர்ந்தால் மத்திய அரசு தலையிடலாம் என தெரிவிப்பதாகவும் அதுவும் மாநில அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மட்டுமே ஆகும் என தெரிவித்தார்.

மதச்சார்பின்மை இந்திய தேசத்தின் கட்டமைப்பில் ஒரு பகுதி எனவும். இதை காக்க மத்திய அரசிடம் சில அதிகாரங்கள் இருந்தால் என்ன பிரச்னை எனவும் வினவினார். மத கலவரத்திற்கு எதிரான மசோதா சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பிர்காகவும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடந்தால் இம்மசோதா கடுமையான சட்டங்களை கொண்டு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறும் போது மத கலவரத்திற்கு எதிரான மசோதாவை நடுவண் அரசு பிஜேபி-யின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுத்துச் செல்லும் என கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தை போன்றும் அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மோடி அரசு போல் இனி எந்த மாநில அரசும் செயல் படாத வகையிலும் இது போன்ற வன்முறைகளுக்கு மாநில அரசோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கும் வகையில் இம்மசோதா அமையும் எனவும் தெரிவித்தார்.
source:thoothu

No comments:

Post a Comment